தமிழ்விடு தூது

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக் கனியேஎன் முத்தமிழே –புத்திக்குள் உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்து உரைக்கும் விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில் குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு உறவுஎன்று மூன்று இனத்தும் உண்டோ - திறம்எல்லாம் வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்த உனைச் சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே*