தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத்தெளிவாகத் தோன்றும்.
தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில்உள
[[கால்டுவெல்]] ([[திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்]])
அடி வகை
தாள் : நெல், கேழ்வரகு அடி தண்டு: கீரை,வாழை அடி கோல் : நெட்டி,மிளகாய்ச்செடி அடி தூறு: குத்துச்செடி, புதர் அடி தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம் அடி கழி: கரும்பின் அடி கழை : மூங்கிலின் அடி அடி: புளி, வேம்பு அடி
கிளைப்பிரிவுகள்
கவை: அடி மரத்தினின்று பிரியும் கிளை: கொம்பு/கொப்பு: கவையின் பிரிவு: கிளை: கொம்பின் பிரிவு; சினை: கிளையின் பிரிவு; போத்து: சினையின் பிரிவு: குச்சு: போத்தின் பிரிவு; இணுக்கு: குச்சியின் பிரிவு
காய்ந்த அடியும் கிளையும்
சுள்ளி: காய்ந்த குச்சு (குச்சி); விறகு: காய்ந்த சிறுகிளை; வெங்கழி: காய்ந்த கழி; கட்டை: காய்ந்த கொம்பும் கவையும் அடியும்.
இலை வகை
இலை: புளி, வேம்பு இலை; தாள்: நெல்,புல் இலை; தோகை: சோளம், கரும்பு இலை; ஓலை: தென்னை, பனை இலை; சண்டு: காய்ந்த தாளும் தோகையும்; சருகு: காய்ந்த இலை
கொழுந்து வகை
துளிர் அல்லது தளிர்: நெல், புல் கொழுந்து; முறி/கொழுந்து: புளி, வேம்பு கொழுந்து குருத்து: சோளம், கரும்பு, தென்னை, பனை கொழுந்து; கொழுந்தாடை: கரும்பின் நுனிப்பகுதி
பூவின் நிலைகள்
அரும்பு: பூவின் தோற்றநிலை; போது: பூவிரியத் தொடங்கும் நிலை; மலர்(அலர்): பூவின் மலர்ந்த நிலை; வீ: மரஞ்செடியினின்று பூ கீழேவிழுந்த நிலை; செம்மல்: பூ வாடின நிலை.
பிஞ்சு வகை
பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு: பிஞ்சு: இளம் காய்; வடு: மாம்பிஞ்சு: மூசு: பலாப்பிஞ்சு; கவ்வை: எள்பிஞ்சு; குரும்பை: தென்னை, பனை இளம் பிஞ்சு; முட்டுக் குரும்பை: சிறு குரும்பை; இளநீர்: முற்றாத தேங்காய்; நுழாய்: இளம்பாக்கு: கருக்கல்: இளநெல்; கச்சல்: வாழைப்பிஞ்சு
குலை வகை
கொத்து: அவரை, துவரை குலை; குலை: கொடி முந்திரி குலை; தாறு: வாழைக் குலை: கதிர்: கேழ்வரகு, சோளம் கதிர்; அலகு அல்லது குரல்: நெல், தினை கதிர்; சீப்பு: வாழைத்தாற்றின் பகுதி
கெட்டுப்போன காய்கனி வகை
சூம்பல்: நுனியில் சுருங்கிய காய்; சிவியல்: சுருங்கிய பழம்: சொத்தை: புழுபூச்சி அரித்த காய்/கனி; வெம்பல்: சூட்டினால் பழுத்த பிஞ்சு; அளியல்: குளுகுளுத்த பழம்: அழுகல்: குளுகுளுத்து நாறிய பழம்/காய்; சொண்டு: பதராய்ப் போன மிளகாய்.
கோட்டான் காய் அல்லது கூகைக்காய்: தேரைக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்: அல்லிக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்; ஒல்லிக்காய்: தென்னையில் கெட்ட காய்.
பழத்தோல் வகை
தொலி: மிக மெல்லியது; தோல்: திண்ணமானது; தோடு: வன்மையானது; ஓடு: மிக வன்மையானது; குடுக்கை: சுரையின் ஓடு; மட்டை: தேங்காய் நெற்றின் மேற்பகுதி; உமி: நெல்,கம்பு முதலியவற்றின் மூடி; கொம்மை: வரகு, கேழ்வரகு உமி
மணிவகை
கூலம்: நெல்,புல் (கம்பு) முதலிய தானியங்கள் பயறு: அவரை, உளுந்து முதலியவை; கடலை: வேர்க்கடலை. கொண்டைக்கடலை; விதை: கத்தரி, மிளகாய் வித்து; காழ்: புளி, காஞ்சிரை (நச்சு மரம்) வித்து; முத்து: வேம்பு, ஆமணக்கு வித்து; கொட்டை: மா, பனை முதலியவற்றின் வித்து; தேங்காய்: தென்னையின் வித்து; முதிரை: அவரை, துவரை முதலிய பயறுகள்.
இளம் பயிர் வகை
நாற்று: நெல், கத்தரி இளநிலை; கன்று: மா, புளி, வாழை இளநிலை; குருத்து: வாழையின் இளநிலை; பிள்ளை: தென்னையின் இளநிலை;