தமிழ்-சொல்-வளம்

அடிப்பகுதி

  1. கோல் - நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
  2. தூறு - குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
  3. கழி - கரும்பின் அடி
  4. வெங்கழி: காய்ந்த கழி
  5. கொழுந்தாடை: கரும்பின் நுனிப்பகுதி
  6. கழை - மூங்கிலின் அடி
  7. அடி - புளி, வேம்பு முதலியவற்றின் அடி
  8. முறி அல்லது கொழுந்து: புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து

கிளைப் பிரிவுகள்

கவை > கொம்பு அல்லது கொப்பு > கிளை: > சினை > போத்து > குச்சு > இணுக்கு

காய்ந்த பகுதிகள்

  1. சுள்ளி: காய்ந்த குச்சு (குச்சி)

  2. விறகு: காய்ந்த சிறுகிளை

  3. கட்டை: காய்ந்த கொம்பும் கவையும் அடியும்

  4. தோகை: சோளம், கரும்பு முதலியவற்றின் இலை

  5. சண்டு: காய்ந்த தாளும் தோகையும்

  6. குருத்து: சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து

பூவின் நிலைகள்

  1. அரும்பு: பூவின் தோற்றநிலை
  2. போது: பூ விரியத் தொடங்கும் நிலை
  3. மலர் (அலர்): பூவின் மலர்ந்த நிலை
  4. வீ: மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை
  5. செம்மல்: பூ வாடின நிலை

பிஞ்சு வகைகள்

  1. பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு
  2. வடு: மாம்பிஞ்சு
  3. மூசு: பலாப்பிஞ்சு
  4. கவ்வை: எள்பிஞ்சு
  5. குரும்பை: தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
  6. முட்டுக் குரும்பை: சிறு குரும்பை
  7. நுழாய்: இளம்பாக்கு
  8. கச்சல்: வாழைப்பிஞ்சு

குலை வகைகள்

  1. அலகு அல்லது குரல்: நெல், தினை முதலியவற்றின் கதிர்

கெட்டுப்போன காய் கனிகள்

  1. சூம்பல்: நுனியில் சுருங்கிய காய்
  2. சிவியல்: சுருங்கிய பழம்
  3. அளியல்: குளுகுளுத்த பழம்
  4. அழுகல்: குளுகுளுத்து நாறிய பழம்
  5. சொண்டு: பதராய்ப் போன மிளகாய்
  6. அல்லிக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்டுப்போன தேங்காய்
  7. ஒல்லிக்காய்: தென்னையில் கெட்ட காய்

பழங்களின் மேற்பகுதி

  • தோலி < தோல் < தோடு < ஓடு
  • குடுக்கை: சுரையின் ஓடு
  • மட்டை: தேங்காய் நெற்றின் மேற்பகுதி
  • உமி: நெல், கம்பு முதலியவற்றின் மூடி
  • கொம்மை: வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி

தாவரங்களின் இளம்பருவம்

  • நாற்று: நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை

  • குருத்து: வாழையின் இளநிலை

  • பிள்ளை: தென்னையின் இளநிலை

  • குட்டி: விளாவின் இளநிலை

  • மடலி அல்லது வடலி: பனையின் இளநிலை

  • வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை - மணிவகை

  • கோதுமையை சம்பாக்கோதுமை, எடுத்துக்கொண்டால் அதில் குண்டுக்கோதுமை, வாற்கோதுமை முதலிய சிலவகைகளே உண்டு.

  • ஆனால் தமிழ்நாட்டு நெல்லிலோ செந்நெல், வெண்னெல், கார்நெல் என்றும் சம்பா, மட்டை, கார் என்றும் அவற்றில் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச் சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.

  • வரகு, குதிரைவாலி, காடைக்கண்ணி முதலிய சிறுகூலங்கள் தமிழ்நாட்டிலன்றி விளைவதில்லை.

[[கால்டுவெல்]]