- தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழக அரசால் 1981- தோற்றுவிக்கப்பட்டது.
- தமிழ்நாடு என்று தெரியும் வகையில் இதன் கட்டிட அமைப்பு உள்ளது.
- இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய வேண்டும் என்பதே இந்தப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்.
- இந்திய ஆட்சிப் பணியாளர்களுக்கு தமிழ்ப் பயிற்சியை இப்பல்கலைக்கழகமே வழங்கி வருகிறது
[[நூலகம்]]
வள்ளுவர் கோட்டம் சென்னை:
-
இதன் பணிகள் 1973 ல் தொடங்கி 1976 ல் முடிக்கப்பட்டன.
-
இது திருவாரூர்த் தேர் போல் அமைக்கப்பட்டு அதனை இரண்டு யானைகள் இழுத்துச் செல்வது போன்று கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.
-
தேரின் மொத்த உயரம் 128
வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறட்பாக்களும் செதுக்கப்பட்டுள்ளன. -
அறத்துப்பால் கருநிறப் பளிங்கு கல்லிலும், பொருட்பால் வெண்ணிறப் பளிங்குக் கல்லிலும், இன்பத்துப்பால் செந்நிறப் பளிங்குக் கல்லிலும் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
-
மேலும் திருக்குறளின் கருத்துக்களை விளக்கும் ஓவியங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி:
-
இந்தியாவின் தெற்கெல்லையாகிய கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
-
1990 ஆம் ஆண்டு இப்பணிகள் தொடங்கியது.
-
பொதுமக்களின் பார்வைக்காக 2000 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாள் திறந்து வைக்கப்பட்டது.
-
பாறையிலிருந்து சிலையின் உயரம் 133 அடி.
-
பீடம் 38 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
-
பொருட்பால் இன்பத்துப்பால் ஆகியவற்றின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் சிலை 95 அடி உயரம் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது.
-
திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு 3 டன் முதல் 8 டன் வரையுள்ள 3681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.
உலகத் தமிழ்ச் சங்கம் - மதுரை:
-
மதுரை மாநகரின் தல்லாகுளம் பகுதியில்
காந்தி அருங்காட்சியகம் அருகில் உலகத்
தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. -
இது 87,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
-
1981 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
-
இக்கட்டிடம் 2016 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
-
இதன் வெளிப்புறச்சுவர்களில் 1330 குறட்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
-
உலகத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் அமைப்பான சங்கத்தமிழ்க் காட்சிக்கூடம் தனிக்கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
-
தருமிக்குப் பாண்டிய மன்னன் பொற்கிழி
வழங்கிய திருவிளையாடல் புராணக்காட்சி இதன் நுழைவாயிலில் இடம்பெற்றுள்ளது. -
தொல்காப்பியர், ஔவையார்,கைலர் ஆகியோரின் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
-
மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைந்த மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கக் கட்டிடமும் சங்கத்தமிழ்க் காட்சிக்கூடமும் தமிழின் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்றன.
சிற்ப கலைக்கூடம் - பூம்புகார்:
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் பூம்புகார் விளங்கியது பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும் பட்டினப்பாலையிலும் இடம்பெற்றுள்ளன.
-
இங்கு மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
-
இந்நகரின் பெருமையை உலகறியச் செய்ய 1973 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
-
இக்கூடம் ஏழுநிலை கொண்டது.
-
கண்ணகியின் மாடங்களைக் வரலாற்றை விளக்கும் 49 சிற்பத்தொகுதிகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
-
மாதவிக்கும் ஒரு நெடிய சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.
-
கலைக்கூடத்திற்கு அருகில் இலஞ்சிமன்றம், பாவைமன்றம், நெடுங்கல்மன்றம் ஆகியன அமைந்துள்ளன.
-
இலஞ்சிமன்றத்திலும் பாவைமன்றத்திலும்
வடிவமைக்கப்பட்டுள்ள
பெண்களின் உருவங்கள் நம் கண்ணையும் கருத்தையும்
கவருகின்றன. -
நெடுங்கல் மன்றத்தில் நெடிய கற்றூண் ஒன்றும் அதனைச் சுற்றி எட்டுச் சிறிய கற்றூண்களும் எட்டு மனித உருவங்களும் தற்காலச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாய் நிற்கின்றன.