- ‘தப்பு’ என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே, அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலையே தப்பாட்டமாகும்.
- ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டம் தற்போது பெண்களாலும் ஆடப்படுகிறது.
- இவ்வாட்டம் தப்பாட்டம், தப்பட்டை, தப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
- இதனைப் பறை என்றும் அழைப்பர்.
- தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாக ‘பறை’ இடம் பெறுகிறது.
‘தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக’என்று தப்பாட்ட இசை குறித்து அருணகிரிநாதர் திருப்புகழில் பதிவு செய்துள்ளார்.