தனிநாயகம் அடிகள்

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு (குறள்.397).

“நான் மனிதன்; மனிதனைச் சார்ந்தஎதுவும் எனக்குப் புறமன்று” இலத்தீன் புலவர் தெறென்ஸ்.

முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என்கிறார் கோர்டன் ஆல்போர்ட் (Gordon Allport) என்னும் உளநூல் வல்லுநர்.

“பூட்கையி ல்லோன் யாக்கைபோல” ([[புறநானூறு]]. 69) என்னும் அடியில் புலவர் [[ஆலத்தூர்கிழார்]]

சீனநாட்டில் பொ.ஆ.மு.604ஆம் ஆண்டில் பிறந்த லாவோட்சும் (Lao-Tse) அவருக்குப் பின்பு கன்பூசியசும் (Confucius பொ.ஆ.மு. 551-479) பிறர் நலவியல் கொள்கையை கற்பித்தனர்.

பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்கத் தத்துவஞானிகள் கிரேக்கக் குடியினரை மட்டுமே தம் சிந்தனைக்கு உட்படுத்தினர்.

பண்டைக்கால தருமசாத்திர நூல்களும் பிறரைக் கவனத்தில் கொள்ளவில்லை. ‘விந்திய மலைத்தொடருக்கும் இமய மலைக்கும் இடையே உள்ள நிலப்பரப்பே கருமபூமி; வீடுபேறு அடைவதற்கு அப்பூமியிலேபிறந்திருக்க வேண்டும்’ என்பதே அவற்றின் கருத்தாக இருந்தது.

தமிழ் மக்களிடமோ, ஸ்டாயிக்வாதிகள் கூறியது போல ‘மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள்; பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களைத் தாழ்த்தவோ உயர்த்தவோ முடியாது’ என்னும் நம்பிக்கை பண்டுதொட்டே நிலவியுள்ளது.

தமிழ்ப்புலவர்கள் பிறநாடுகளைக் குறிப்பிடும் போது வேற்று நாடு, பிறநாடு என்று குறிக்காது மொழிமாறும் நாடு – மொழிபெயர் தேயம் – என்றேவரையறுத்துக் கூறியுள்ளனர்.

பண்புடைமை என்னும் அதிகாரத்திற்கு உரை கண்ட பரிப்பெருமாள் பின்வருமாறு கூறியுள்ளார்: “ பண்புடைமையாவ து யாவர்மாட்டும் அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை”.

இமயமலை, நீடிக்கும் உறுதிக்கு மேற்கோளாகக் காட்டப்படுகின்றது.

இமயத்துக்கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத் தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே (புறம். 214, 11-13)

புலவர்கள் குமரி ஆறு, காவிரி ஆறு போன்ற மணல் நிறைந்த இடங்களை நீண்டவாழ்க்கைக்கு உவமையாகக் கூறுகிறார்கள்.

”இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக்கொண்டல் மாமழை பொழிந்தநுண்பல் துளியினும் வாழிய பலவே”.- புறம் 34 (அடி 21-23)

திருக்குறளில் பூட்கைமகன் அல்லது குறிக்கோள் மாந்தனின் இயல்புகள் பல

பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழனுக்குக் கூறியது போலத் தமிழ்ச் சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தைத் தருவதாகும் (புறம் 191).

மார்க்ஸ் அரேலியஸ் என்னும் பேரரசர் கூறியதாவது: “நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்: நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்”

ஜி.யு. போப் திருவள்ளுவரை “உலகப் புலவர்” என்று போற்றுவது

”உள்ளற்க உள்ளம்சிறுகுவ” (798) என்றும் ”உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்” (596) என்றும் கற்பித்துள்ளார்