தந்தை-பெரியார்

  • சுயமரியாதை இயக்கம் - 1925

  • இதழ்கள் - குடியரசு, விடுதலை, உண்மை, ரிவோல்ட் (ஆங்கில இதழ்)

  • வெண்தாடி வேந்தர், பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர். ஈரோட்டுச் சிங்கம், சுய மரியாதைச் சுடர், தெற்காசியாவின் சாக்ரடீஸ், புத்துலகத் தொலை நோக்காளர், பெண்ணினப் போர்முரசு

  • பெரியார் எதிர்த்தவை : இந்தித் திணிப்பு, குலக்கல்வித் திட்டம், தேவதாசி முறை கள்ளுண்ணல், குழந்தைத் திருமணம், மணக்கொடை

  • இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்.

  • மொழியோ நூலோ இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்.

  • மதம், கடவுள் ஆகியவற்றின் தொடர்பற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை அறிவைத் தரும் இலக்கியம் , யாவரும் மறுக்க முடியாத அறிவியல் பற்றிய இலக்கியம் ஆகியவற்றின் மூலம்தான் ஒருமொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மை அடைய முடியும்; அத்துடன் அவற்றைப் பயன்படுத்தும் மக்களும் அறிவுடையவராக உயர்வர்

  • நாட்டு விடுதலையைவிட, பெண் விடுதலைதான் முதன்மையானது.

  • வேலைவாய்ப்பில் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்பட வேண்டும்.

  • அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயம்

  • “மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்படவேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும்.

  • உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஒள’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார் (ஐயா அய்யா, ஒளவை அவ்வை).

  • அதுபோலவே, மெய்யெழுத்துகளில் சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார்;

  • அவ்வாறு குறைப்பதால் தமிழ்மொழி கற்பதற்கும் தட்டச்சு செய்வதற்கும் எளிதாகும்.

  • இச்சீரமைப்புக்கான மாற்று எழுத்துருக்களையும் (வரி வடிவம்) உருவாக்கினார்.

  • பெரியாரின் இக்கருத்தின் சில கூறுகளை 1978ஆம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.

  • 1938 நவம்பர் 13 இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

  • 27.06.1970 இல் யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பு தந்தை பெரியாரைத் தெற்கு
    ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

  • பெரியார் விதைத்த விதைகள்

    கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு

    பெண்களுக்கான இடஒதுக்கீடு

    பெண்களுக்கான சொத்துரிமை

    குடும்ப நலத்திட்டம்

    கலப்புத் திருமணம்

    சீர்திருத்தத் திருமணம் ஏற்பு