ஜலாலுதீன்-கில்ஜி

  • 1290 - 1296
  • கில்ஜி வம்சத்தை நிறுவியவர்.
  • அரியணை ஏறிய போது வயது-70.
  • இரத்தம் சிந்தாத ஆட்சியை வழங்க விரும்பிய இவர் கருணை உள்ளம் கொண்டவர்.
  • கி.பி. 1292-ல் மங்கோலியர்கள் நுழைவதை வெற்றிகரமாக தடுத்த வீர உள்ளம் கொண்டவர்.
  • சித்திமேளா என்ற இசுலாமிய சித்தர் தனக்கெதிராக சதி ஆலோசனை செய்தார் என அவரை கொலை செய்தார்.
  • பால்பணின் மருமகன் மாலிக் சஜ்ஜியை காராவின் ஆளுநராக நியமித்தார்.
  • இவர் 1292-ல் கலகத்தில் ஈடுபட்டதால் ஜலாலுதின் தனது மருமகன் அலாவுதீன் கில்ஜியை காரா (அலகாபாத் சுத்திய பகுதியின் ஆளுநராக நியமித்தார்.
  • பின்னர் அலாவுதீன் மால்வா பகுதியை வெற்றி கொண்டார். அவருக்கு அயோத்தியை பரிசாக வழங்கினார் ஜலாலுதீன் கில்ஜி.
  • அலாவுதின் 2 ஆண்டுக்கு பின் 8000 குதிரை வீரர்களை தாண்டி தெற்கு படையெடுப்பை மேற்கொண்டார்.
  • தௌலதாபாத் (தேவகிரி) பகுதியை ஆட்சி செய்த இராமச் சந்திர தேவரை தோற்கடித்தார். அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பெடும் செல்வத்துடன் காரா திரும்பினார்.
  • அப்போது அலாவுதின் வெற்றியை கொண்டாட ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜலாலுதினை ஜீலை 19, 1296-ல் கொலை செய்தனர்.