சோழர்கள்

  • சங்க காலத்தில் சோழ அரசு வேங்கட மலைகள் வரை விரிந்திருந்தது.
  • காவிரி கழிமுகப்பகுதி சோழ நாட்டின் மையப் பகுதியாக விளங்கியது.
  • இப்பகுதி பின்னர் சோழ மண்டலம் என அறியப்பட்டது.
  • சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் கரிகால் வளவன் அல்லது [[கரிகாலன்]] ஆவார்.
  • அவர் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த 11 வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையைத் தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்கடித்தார்.
  • அவர் காடுகளை விளைநிலங்களாக மாற்றினார்.
  • வேளாண்மையை மேம்படுத்துவதற்காகக் காவிரி ஆற்றின் குறுக்கே [[கல்லணை]]யைக் கட்டினார்.
  • சோழர்களின் துறைமுகமான புகார் இந்தியப் பெருங்கடலின் பல பகுதிகளிலிருந்து வணிகர்களை அதன்பால் ஈர்த்தது.
  • [[பட்டினப்பாலை]] எனும் பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல், கரிகாலனின் ஆட்சியின் போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது.
  • கல்லணை கட்டப்பட்ட போது 69,000 ஏக்கர் நிலத்திற்கு அது நீர்ப்பாசன வசதியை வழங்கியது.

முக்கியத்துவம் வாய்ந்த சோழ அரசர்கள்:

  • இளஞ்சேட்சென்னி
  • கரிகாலன்
  • கோச்செங்கணான்
  • கிள்ளிவளவன்
  • பெருநற்கிள்ளி

பிற்காலச் சோழர்கள்:

தலைநகர் உறையூர்

  • 9ஆம் நூற்றாண்டில் காவிரிக்கு வடக்கே ஒரு சிறு பகுதியை ஆண்டுவந்த [[விஜயாலயன்]] சோழ வம்சத்தை மீட்டெழச்செய்தார்.
  • இவர் தஞ்சையை கைப்பற்றி தலைநகர் ஆக்கினார்.
  • முதலாம் ராஜேந்திரனும் அவருக்குப் பின் வந்தோரும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாக கொண்டு சோழப்பேரரசை ஆட்சி செய்தனர்.
  • முதலாம் [[ராஜராஜ சோழன்]] புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் யை ( ராஜராஜேஸ்வரம் கோவில்/பிரகதீஸ்வரர்கோவில்) தஞ்சாவூரில் கட்டினார்.(1010)
  • முதலாம் ராஜராஜனின் மகனும் அவருக்குப்பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவருமான முதலாம் [[ராஜேந்திர சோழன்]] (1014-1044) தந்தையைப் போலவே பேரரசை விரிவுபடுத்தி கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்தார்.
  • கி.பி. 1023-ல் அரியணை ஏறிய பின்னர் அவருடைய மிக முக்கியப் படையெடுப்பான வடஇந்தியப் படையெடுப்பில் பல பகுதிகளைக் கைப்பற்றினார்.
  • கங்கை கொண்டான் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
  • வடஇந்தியப் போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக [[கங்கைகொண்ட சோழபுரம் கோவில்]] எழுப்பப்பட்டது.

சோழப் பேரரசின் சரிவு:

  • வீர ராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் உள்நாட்டுக் கலகம் ஒன்றில் கொல்லப்பட்டார்.
  • அதிராஜேந்திரனின் மறைவிற்குப் பிறகு, கீழைச் சாளுக்கிய இளவரசரான ராஜேந்திர சாளுக்கியன், சோழ அரியணையைக் கைப்பற்றினார்.
  • [[முதலாம் குலோத்துங்கன்]] எனும் பெயரில் சாளுக்கிய-சோழ வம்சத்தின் ஆட்சியை அவர் தொடங்கிவைத்தார்.
  • இலங்கையில் சோழர்களுக்குச் சொந்தமாக இருந்த பகுதிகளை இழந்தார்.
  • பாண்டிய நாட்டிலிருந்த பகுதிகளும் சோழர்களின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவின.
  • காஞ்சிபுரத்தைத் தெலுங்குச் சோழர்களிடம் இழக்க நேரிட்டது. 1279- ல் பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மூன்றாம் ராஜேந்திர சோழனைத் தோற்கடித்துப் பாண்டியர் ஆட்சியை இன்றைய தமிழகத்தில் நிறுவினார். அத்துடன் சோழ வம்சத்தின் ஆட்சி முடிவுற்றது.

நிர்வாக முறை:

  • நிர்வாக வசதிக்காகப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மண்டலமும் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாட்டுப் பிரிவுக்குள்ளும் பல கூற்றங்கள் (கிராமங்களின் தொகுப்பு) இடம் பெற்றிருந்தன. கிராமமே நிர்வாக அமைப்பின் மிகச் சிறிய அலகாகும்.

உள்ளாட்சி நிர்வாகம்:

  • உள்ளாட்சி நிர்வாகமானது ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார் எனும் அமைப்புகளின் மூலமாகச் செயல்பட்டது.
  • பிராமணர் கிராமங்களைச் சேர்ந்த சபையோர் பொது நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும், நீதி வழங்குதலையும் மேற்கொண்டனர்.
  • வணிகர்களின் குடியிருப்புகளை நகரத்தார் நிர்வகித்தனர்.
  • நாடுகளில் நாட்டார் எனும் அமைப்பு நாடோடு தொடர்புடைய பூசல்களையும் ஏனைய சிக்கல்களையும் தீர்த்துவைத்தது.

உத்திரமேரூர் கல்வெட்டுகள்:

  • காஞ்சிபுர மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கிராமம் பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட ஒரு பிரம்மதேய கிராமமாகும்.

வருவாய்:

  • சோழ அரசின் பொதுவருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது.
  • நிலவரியானது “காணிக்கடன்” என அழைக்கப்பட்டது.
  • நிலவரியை நிர்ணயம் செய்வதற்காக சோழ அரசு விரிவான அளவில் நில அளவைப் பணியை மேற்கொண்டது.
  • மகசூலில் மூன்றில் ஒரு பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது.
  • இவ்வரி பெரும்பாலும் தானியமாகவே வசூல் செய்யப்பட்டது.
  • சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் “பள்ளிச்சந்தம்” என அழைக்கப்பட்டது.
  • “வேளாண்வகை” என்னும் நிலங்களின் உடைமையாளர்கள் வேளாளர் என்றழைக்கப்பட்டனர்.
  • வேளாளரில் ஒரு பிரிவினரான “உழுகுடி” என்போர் நிலங்களின் உடைமையாளர்களாக இருக்க இயலாது.
  • மொத்த விளைச்சலில் வேளாண்வகை நிலவுடைமையாளர்கள் “மேல்வாரத்தைப்” (விளைச்சலில் பெரும்பகுதி) பெற்றனர். உழுகுடிகள் “கீழ்வாரத்தைப்” (விளைச்சலில் சிறிய பகுதி) பெற்றனர்.
  • “அடிமை” மற்றும் “பணிசெய் மக்கள்” என்போர் சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்தனர்.
  • சோழர்கள் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் வழங்கினர்.
  • கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழானால் உருவாக்கப்பட்ட பதினாறு மைல் நீளம் கொண்ட ஏரிக்கரைத் தடுப்பணை
  • சோழர்கள் சைவத்தின் மீது மிகுதியான பற்றுக் கொண்டவராவார்.
  • [[நம்பியாண்டார் நம்பி]]யால் தொகுக்கப்பட்ட “திருமுறைகள்”

கோவில்கள்:

  • [[தஞ்சை பெரிய கோவில்]]
  • கங்கைகொண்ட சோழபுரம்
  • தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவில்

சோழர்களின் கல்விப் பணி:

  • முதலாம் ராஜேந்திரன் எண்ணாயிரம் எனும் கிராமத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவினார்.
  • புதுச்சேரிக்கு அருகேயுள்ள திருபுவனை எனும் ஊரிலும், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருமுக்கூடலிலும் முறையே 1048, 1067 ஆகிய ஆண்டுகளில் இதே போன்ற கல்லூரிகள் நிறுவப்பட்டன.
  • “பெரியபுராணமும் கம்பராமாயணமும்” இக்கால பகுதியைச் சேர்ந்தவையாகும்.

வணிகம்:

  • மணி -வண்ணத்தார்

  • அஞ்சு - வண்ணத்தார் குழுவானது மேற்கு ஆசியர்கள், அராபியர்கள், யூதர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். அவர்கள் கடல் கடந்து வணிகம் செய்தோர் ஆவர்.

  • அவ்விரு அமைப்புகளும் “ஐநூற்றுவர், “திசை- ஆயிரத்து ஐநூற்றுவர்” எனும் பெயர்களில் ஒருங்கிணைந்தன.

  • ஐநூற்றுவர் அமைப்பு தென்கிழக்காசிய நாடுகளை உள்ளடக்கிய கடல் கடந்த வணிக நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது.

  • தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு மேற்கொள்ளப்பட்ட கடல் கடந்த வணிகத்தின் மூலம் யானைத் தந்தங்கள், பவளம், சங்குகள், ஒளிபுகும் - புகா கண்ணாடிகள், பாக்கு, ஏலம்,
    வர்ணப் பட்டு நூல்களோடு நெய்யப்பட்ட பருத்தி இழைத்துணிகள் ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன.

  • சந்தனக்கட்டை, கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ஆபரணக் கற்கள், மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன.