சேரர்கள்

“போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” எனச் சேரரை முன் வைக்கின்றது [[தொல்காப்பியம்]]

  • பனம்பூ சேரர்களுக்குரிய பூ ஆகும்.

  • சேரர்களின் கொடி விற்கொடி ஆகும்.

  • தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மற்றும் வடக்குத் திருவிதாங்கூர், கொச்சி, தெற்கு மலபார், கொங்கு மண்டலம் ஆகியவற்றை ஆண்டனர்.

  • [[பதிற்றுப்பத்து]] சேர அரசர்கள் குறித்தது.

  • சேரன் செங்குட்டுவன் வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார்.

  • கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக அவர் இமயமலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்தார்.

  • பத்தினித் தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தார்.

  • இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பியாவார்.

  • சேரல் இரும்பொறை எனும் அரசன் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார்.

  • சேர நாணயங்களில் அவர்களின் சின்னமான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்டுள்ளன.

  • சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது.

  • வஞ்சி மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் பேரியாற்றங்கரையில் இருந்தது.

  • வஞ்சியைக் கருவூர் என்றும் அழைப்பர்.

  • தொண்டி, முசிறி, காந்தளூர் என்பன சேரநாட்டின் துறைமுகப் பட்டினங்களாக விளங்கின.

  • சேர நாடு என்பது இன்றைய கேரளப் பகுதிகளும் தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகளும் இணைந்த பகுதியாக விளங்கியது என்பர்.

முக்கியத்துவம் மிகுந்த சேர அரசர்கள்:

  • உதயன் சேரலாதன்
  • இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
  • சேரன் செங்குட்டுவன்
  • சேரல் இரும்பொறை.

[[சேலம்]], கோவைப் பகுதிகள் கொங்கு நாடு என்று பெயர்பெற்றன.

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டலச் சதகம் என்னும் நூலில் வடக்கேபெரும்பாலை, தெற்கே பழனிமலை, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கரை என இந்நான்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதியாகக் கொங்குமண்டலம் விளங்கியதாகக் கூறப்படுகிறது.

இன்றைய [[நீலகிரி]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[ஈரோடு]], [[நாமக்கல்]], [[திண்டுக்கல்]] ஆகிய மாவட்டங்களையும் சேலம், [[கரூர்]] மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாகக் கொங்குமண்டலம் விளங்கியது என்பர்.

கொங்குநாட்டுப் பகுதியை [[காவிரி]], பவானி, நொய்யல், ஆன்பொருநை என்று அழைக்கப்படும் அமராவதி ஆகிய ஆறுகள் வளம் செழிக்கச் செய்கின்றன.

சேரர்கள் வலிமைமிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர்.

செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டான்.

கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களைச் சேரமன்னர்கள் அடக்கினர்.

முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.