ஆசிரியர் - [[திருத்தக்க தேவர்]]
- “தமிழ்க் கவிஞர்களின் அரசன் - திருத்தக்க தேவர்” said by [[ஜி.யு.போப்]]
- ஒன்பதாம் நூற்றாண்டு
- சோழநாட்டை சேர்ந்த சமணர்
- சீவக சிந்தாமணி எழுதுவதற்கு முன்னோட்டமாக நரி விருத்தம்
- திருத்தகு முனிவர், திருத்தகு மாமுனிவர், திருத்தக்க மகாமுனிகள்,
- தமிழன்னைக்கு அணி செய்தவர் [[திருத்தக்க தேவர்]]
நூல்
- முதல் விருத்தப்பா காப்பியம்
- நாமகள் இலம்பகம் முதல் முக்தி இலம்பகம் வரை 13 இலம்பகம் - 3145 பாடல்
- மண நூல் - 13 இலம்பகங்களும், 8 மனைவிகளைப் பற்றிக் கூறுவதால்
- இலம்பகங்கள்
- நாமகள் இலம்பகம்
- கோவிந்தையார் இலம்பகம்
- காந்தருவதத்தையார் இலம்பகம்
- குணமாலையார் இலம்பகம்
- பதுமையார் இலம்பகம்
- கேமசரியார் இலம்பகம்
- கனகமாலையார் இலம்பகம்
- விமலையார் இலம்பகம்
- சுரமஞ்சியார் இலம்பகம்
- மண்மகள் இலம்பகம்
- பூமகள் இலம்பகம்
- இலக்கணையார் இலம்பகம்
- முத்தி இலம்பகம்
- உரை : [[நச்சினார்க்கினியர்]]
- சிந்தாமணி - நினைத்ததை தரும் ஆற்றல்மிக்க சிந்தாமணிக்கல் அதைப் போன்று இலக்கிய வளம் நிறைந்தது
- சிந்தாமணி - ஒளிகுன்றாத மணி
- காம நூல்
- முக்தி நூல் - இளமை நிலையாமை, இன்ப நிலையாமை, செல்வ நிலையாமை பற்றிக் கூறுவதால்
சிறப்புகள்
- குன்றுதல் இல்லாத அழகிய தமிழ்நடை உடையதாலும் தமிழ்மாந்தர் தம் நெஞ்சில் வைத்து போற்றத்தக்கதாலும் சிந்தாமணி என்று பெயர்பெற்றது
- சீவகசிந்தாமணிக்கு நிகரான கவிதை - நீலகேசி
- காந்தர்வதத்தை இலம்பகம் இடம்பெற்ற நூல் சீவகசிந்தாமணி
- ஜி.யு. போப் சீவகசிந்தாமணியை [[இலியட்]], [[ஒடிசி]]யுடன் ஒப்பிட்டுள்ளார்.
- சிந்தாமணியில் ஓர் அகப்பை முகந்து கொண்டேன் என்று கூறியவர் [[கம்பர்]].
- சரவண பெலகொலாக் கல்வெட்டுகளில் திருத்தக்க தேவர் பற்றிய குறிப்புகள்
- கல்வி கற்கும் இடத்தை கல்லூரி என கூறுமிடம்
மேற்கோள்கள்
“சிலைத்தொழிற் சிறு நுதற் தெய்வப் பாவைபோற்
கலைத்தொழிற் படவெழீஇப் பாடி னாள்கனீந்
“இருநில மடந்தை யீன்ற திருவீசும் பென்னும் கைத்தாய்”
“வீழ்ந்து வெண்மலை தவமும் விண்ணுறு பெருவரை பெருபாம்பு ஊழ்ந்து தோலுரிப் பனபோல் ஒத்த மற்றவற் றருவி
பாடப் பகுதி
நாமகள் இலம்பகத்தில் நாட்டுவளம்
==சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே*.== (53)
==அந்தரத் தார்மய னேஎன ஐயுறும் தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன் வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி,“ஓர்எந்திர வூர்திஇ யற்றுமின்” என்றான்.== - ==சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் 50.==
- சீவக சிந்தாமணிக் காப்பியத்தில் குணமாலை என்னும் தலைவி யானையைக் கொண்டு அஞ்சிய காட்சியைச் சீவகன் துனியில் வரைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே