ஆசிரியர் - [[இளங்கோவடிகள்]]
- சேர மரபினர்
- தமையன் சேரன் செங்குட்டுவன்.
- அரசியல் வேறுபாடு கருதாத சமயவேறுபாடு அற்ற துறவி.
- “முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது, அடிகள் நீரே அருளுக” என்று கூறியவர்
சீத்தலை சாத்தனார். “
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று சிலப்பதிகாரத்தை என இயற்றியவர் இளங்கோ. - சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் - [[பாரதியார்]]
நூல்
- புகார் -10 + மதுரை - 13 + வஞ்சி - 7 = 30 படலங்கள்
- புகார்க் காண்டம் - சோழநாடு, மதுரை காண்டம் - பாண்டிய நாடு வஞ்சிக்காண்டம் - சேரநாடு
- ==உரைப்பாட்டு மடை - தமிழ் நடை - உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு==
- முதல் காப்பியம், முத்தமிழ் காப்பியம், நாடக காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், குடிமக்கள் காப்பியம், இரட்டைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக் காப்பியம், தமிழ் தேசியக் காப்பியம்.
- வழக்குரை காதை மதுரைக்காண்டத்தின் 10 வது காதையாகும்.
- உரை : அடியார்க்கு நல்லார்
- ந.மு. வேங்கடசாமி நாட்டார்- தற்கால உரை
- இசை நாடகமே சிலப்பதிகார கதையின் உருவம்
சிலம்பு கூறும் மூன்று உண்மைகள்:
-
அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று
-
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
-
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
சிலப்பதிகாரம் குறித்து சான்றோர்கள்
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு - [[பாரதியார்]]
தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் - [[கவிமணி தேசிக விநாயகம்]]
சிலப்பதிகாரம் என்பதை விட சிறப்பதிகாரம் என்பதே சிறந்தது - [[உ.வே.சா|உ.வே.சா]]
தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள் - [[மு.வ]]
சிறப்புகள்:
மன்னனை தலைவனாகக் கொள்ளாமல் மக்களை தலைமையாகக் கொண்டு
இயற்றப்பட்ட நூல்.
இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்தனாரின் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார்.
கண்ணகிக்கு கோவில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன்.
கண்ணகிக்கு இமயமலையில் சிலையெடுத்த போது உடனிருந்த அரசர்கள்- இலங்கை மன்னன் கயவாகு, சோழ மன்னன் பெருநற்கிள்ளி, கனகவிசயன்.
கண்ணகிக்கு கோயில் அமைந்துள்ள இடம் - கேரளா திருவஞ்சிக் களம்
கண்ணகி வழிபாடே தற்போது துரோபதை, காளியம்மன் வழிபாடாக ஏற்று தீமிதி திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
[[கண்ணகி]] என்ற சொல்லுக்கு கண்களால் நகுபவள் என்று பொருள்.
வரி என்பது இசைப்பாடல் .
கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல்
இந்திர விழா 28 நாட்கள்
தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகச் [[சிலப்பதிகாரம்]] குறிப்பிடுகிறது.
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன.
==கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி== (சிலம்பு 5 : 112)
பாடப் பகுதி
==விருந்தோம்பல்==
கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணி வருந்துவதாக,
==தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”==
சிலப்பதிகாரம், 16: 72- 73
==காற்று பற்றி==
==வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்==
==[[குடக்கூத்து]] பற்றி==
மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் ‘குடக்கூத்து’ குறிப்பிடப்படுகிறது.
==[[இந்திரவிழா]] ஊரெடுத்த காதை (அடி 13-39)==
==வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும்; பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;==
==தூசும்== ==துகிரும்== ==ஆரமும்== ==அகிலும்== ==மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;====
==
==பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு== ==கூலம் குவித்த கூல வீதியும்==
==காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர், மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர், பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;==
==கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
==
==கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டாளரும்== ==பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும் துன்ன காரரும் தோலின் துன்னரும் கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்==
==பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்; குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும் அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்; சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்==
==திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்==
==மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலான்==
தமிழ் நாடும் சிலம்பும்
==காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து== கண்ணகியும் கோவலனும் ==திருவரங்கம்== மற்றும் ==உறையூர்== வழியாகக் ==கொடும்பாளூர்== என்னும் இடத்தை அடைந்தனர்.
==தென்னவன் [[சிறுமலை]]யின்== வலப்பக்கம் மதுரையை அடையலாம்.
இடப்பக்கம் சென்றால் ==திருமால்குன்றம் (அழகர் மலை)== வழியாக மதுரை செல்லலாம்.
இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியில், மூன்று வழிகளும் சந்திக்கும் மதுரைப் பெருவழியை அடைந்து, மதுரை செல்லலாம். கோவலனையும் கண்ணகியையும் ==[[கவுந்தியடிகள்]]== இடைப்பட்ட வழியிலேயே அழைத்துச் சென்றார்.
மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக ==நெடுவேள் குன்றம்(சுருளி மலை)== சென்று ==வேங்கைக் கானல்== என்னுமிடத்தை அடைந்தாள்.
==[[இராமநாதபுரம்]] - தொண்டி==
==‘ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்’==
ஊர்காண்காதை.
==[[திண்டுக்கல்]] - [[சிறுமலை]]==
==வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்==
மேற்கோள்கள்
வழக்குரைக் காதையில் கண்ணகியின் கூற்று:
வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத்தான்தன் அரும்பெரும் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா நின்னகரப் புகுந்தீங்
வெஷம்
நற்றிறம் படராக் கொற்கை வேற்தே என்காற் சிலம்பு மணியுடை அரியே
==மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த== ==பட்டிமண்டபம்== ==சிலப்பதிகாரம் (காதை 5, அடி 102)==
==“ஓவிய விதானத்து, உரைபெறு நித்திலத்து மாலைத்தாமம் வளையுடன் நாற்றி, விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம் “==
சிலப்பதிகாரம்,புகார்க்காண்டம் அரங்கேற்றுக்காதை (1I-113)
==இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்== - வஞ்சி : 165
[[சிலப்பதிகார கதை]]