சிற்பி-பாலசுப்பிரமணியம்

எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால் ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே! கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக் குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா!

பிறப்பு: 29.07.[[1936]]

இடம்: ஆத்துப்பொள்ளாச்சி

அறிமுகம்

  • விரிவுரையாளராகத் தம் பணியைத் தொடங்கிய பாலசுப்பிரமணியம், பாரதியார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார்.
  • கவிதை மீது இருந்த பிரியத்தால் சிற்பி என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார்.
  • இரு முறை சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர்.
  • [[வானம்பாடி காலம்]] கவிதை இயக்கத்தின் பங்களிப்பாளர்களில் ஒருவர்.
  • கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
  • மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் மொழிபெயர்த்துள்ளார்.
  • சாகித்திய அகாதமியின் உறுப்பினர்

இதழ்கள்

  • [[வானம்பாடி காலம்]]
  • அன்னம் விடு தூது
  • வள்ளுவம்
  • கவிக்கோ
  • [[கணையாழி]]

படைப்பு

நிலவுப் பூ

சிரித்த முத்துக்கள்

மௌன மயக்கங்கள்

[[ஒரு கிராமத்து நதி]]

  • சாகித்திய அகாதமி

நீலக்குருவி

கவிதை வானம்

அக்கினி சாட்சி.