சித்தர்கள்

[[திருமூலர்]]

  • திருமந்திரத்தை இயற்றியவர்
  • திருமந்திரம் சைவத் திருமுறையில் 10 ஆம் திருமுறைஆகும்.

சிவவாக்கியர்

  • இவர் பாடிய பாடல்கள் 520,
  • யோகசித்தர் என அழைக்கப்பட்டார்.
  • மிகுந்த சீர்திருத்தவாதி

பட்டினத்தார்

  • இயற்பெயர் - சுவேதாரண்யர்
  • மற்றொருபெயர் திருவெண்காடர்
  • நிலையாமையினை உணர்ந்தயோகி

பத்திரகிரியார்

  • துளுவ நாட்டு மன்னர் பட்டினத்தாரை கழு ஏற்ற முயன்ற போது தோற்றார்.
  • 235 கண்ணிகள் பட்டினத்தாருக்கு அடிமையாகி அரச இன்பங்களை துறந்தார்.
  • இவரது பாடல்கள் பத்திரகிரியார் புலம்பல்கள் எனப்படும்.
  • இவர் பெண்ணின் மாண்பை போற்றுவதை பேய் போல் திரிந்து பிணம் போல் கிடந்து பெண்ணைத் தாய் போல் நினைத்துத் தவம் முடிப்பது எக்காலம் என்ற சிந்தனையின் வழி அறியலாம்.

பாம்பாட்டி சித்தர்

  • பாம்பு வடிவாக மண்டலத்திலுள்ள குண்டலினி சக்தியை எழுப்பி அதன் மூலம் ஆன்ம தரிசனம் பெற இயலும் என்பது இவரது கொள்கை.
  • மனித உடலின் அடிவயிற்றுப்பகுதியில் எருவாய்க்கும் கருவாய்க்கும் நடுவில் பாம்பு புற்றில் கிடப்பது போல் இருப்பது குண்டலினி சக்தி. இதனை எழுப்பி மேலே செலுத்த ஆடுபாம்பே என பாடியதால் பாம்பாட்டிசித்தர் எனப்பட்டார்.
  • இவர் 129 பாடல்கள் பாடியுள்ளார். கொங்கு நாட்டு மருதமலையில் வாழ்ந்தார்.

இடைக்காட்டுச் சித்தர்

  • கோனார் என வழங்கப்படும் இடையர்களையும் ஆடு மாடுகளையும் முன்னிறுத்தி பாடியதால் இவருக்கு இப்பெயர் வழங்கப்பட்டது.
  • இடைக்காடு என்னும் ஊரைச் சேர்ந்தவர் ஆதலால் இடைக்காட்டுச் சித்தர் என்ற பெயர் வழங்கலாயிற்று.
  • கொங்கன சித்தரின் சீடர்
  • காலம் கி.பி.15.ஆம் நூற்றாண்டு
  • “அவித்தவித்து முளையாதே தாண்டவக்கோனே - பத்தி அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே”எனக் கூறுவதன் மூலம் கடவுள் பக்தியையும் மேன்மையையும் அறிய முடிகிறது.

அகப்பேய் சித்தர்

  • அலையும் மனத்தைப் பேய் என உருவகித்ததால் இவருக்கு இப்பெயர் வழங்கலாயிற்று.
  • பேய் மனதை பெண்ணாக விளித்துப்பாடியவர் - அகப்பேய் சித்தர்
  • முனதை அலைய விடாமல் ஒரு நிலையில் நிறுத்த வேண்டும் என்பதனை “ஆரலைந் தாலும் நீயலையாதேடி ஊரலைந் தாலும் ஒன்றையும் நாடாதே” எனஅறிவுறுத்துகிறார்.

குதம்பைசித்தர்

  • குதம்பை என்பது காதணி.
  • குதம்பை அணிந்த பெண்களை முன்னிலைப்படுத்தி பாடியதால்.
  • பாடிய பாடல்களின் எண்ணிக்கை 32.

கடுவெளிச்சித்தர்

  • 400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள்
  • உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்டவர்
  • வைதோரைக் கூட வையாதே இந்த வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே - கடுவெளிச்சித்தர்
  • நந்தவனத்தில் ஓர் ஆண்டி-அவன் நாலாறுமாதமாய்க் குயவனைவேண்டி கொண்டுவந்தான் ஒருதோண்டி-அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுஉடைத் தாண்டி என்னும் பாமரரும் அறிந்தபாட்டு இவருடையதே.

அழுகுணிச் சித்தர்

  • இவரது பாடல்கள் அழகும் அணிநயமும் மிகுந்த காணப்படுவதால் இவருக்கு இப்பெயர்
  • பையூரிலேயிருந்து பாழுரிலே பிறந்து மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்.

கொங்கணிசித்தர்

  • காலம் கி.பி.7ஆம் நுாற்றாண்டு
  • கொங்கு நாட்டைச் சேர்ந்தவர்.
  • இவர் ரசவாதம், யோகம், மருத்துவம் பற்றிய நூல்கள் எழுதியுள்ளார்.
  • முக்திபெற்ற இடம் திருப்பதி.
  • கண்டதும் கேட்டதும் சொல்லாதே கண்ணில் காணாத உத்தரதம் விள்ளாதே பெண்டாட்டிக்கு உற்றது சொல்லாதே பெற்ற பிள்ளைக்கு இளப்பம் கொடுக்காதே.

சட்டமுனி

  • சட்டமுனி 1200, திரிகாண்டம், சரக்குவைப்பு, நவரத்தினவைப்பு.
  • தயக்கத்தினால் வரும் தீமைபற்றி

அகத்தியர்

  • முதல் சித்தர் அகத்தியர்,
  • குருமுனி, நாதமுனி
  • அனைத்து சமயத்தின் கொள்கைகளையும் அவற்றில் உள்ள மேன்மைகளை போற்ற வேண்டும் என்றவர் - அகத்தியர்.

சுப்பிரமணியசித்தர்

  • இறைவனை முருகனாகவே காண்கிறார்.
  • பல பாடல்களில் முருகனை மயில் வீரன் எனக் குறிப்பிடுகின்றார்.

போகர்

  • திருமூலரின் மாணாக்கர் காலங்கிநாதர்.
  • காலங்கி நாதரின் மாணாக்கர் - போகர்.
  • போகர் ஏழாயிரம், போகர் திருமந்திரம், நிகண்டு பதினேழாயிரம்
  • மருத்துவ பழஞ்சுவடிகளை போகரின் பெயரால் கூறுவது நடைமுறையில் காணப்படுகிறது.
  • போகர் நிகண்டு சித்த மருத்துவம் குறித்த
  • முக்தி பெற்ற இடம் பழனி,

உரோமமுனி

  • உடல் முழுவதும் உரோமம் மிகுதியாக இருந்ததால் இவருக்கு உரோம முனி
  • உரோம முனிஞானம், உரோமமுனி நூறு, உரோமமுனி ஐநூறு, ஐம்புலநூல்.

கரூவூர் சித்தர்

  • கருவூரில் பிறந்ததால்
  • பிரகதீஸ்வரர் கோவிலின் லிங்கத்தை நிறுவினார் என்பது மரபு.
  • பெரிய கோவிலில் கரூவூர் சித்தருக்கு சிலை உள்ளது.
  • இவர் பூஜைக்கு உரிய ஆகம விதிகளை பாடியுள்ளார்.

தேரையர்

  • பாண்டிய மன்னனின் தலைக்குள் இருந்த தேரையை அகற்றியதால்
  • நோய் அணுகவிதி, பாதார்த்தகுணசிந்தாமணி, வைத்தியசிந்தாமணி, கலைஞானம்
  • வைத்தியத்தில் மிகவும் புலமைப்பெற்றவர்.
  • அகத்தியரின் மாணாக்கரில் ஒருவர் தேரையர்.

வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றனர் சித்தர்கள்