சாளுக்கியர்கள்

  • சாளுக்கியர் தென்னிந்தியாவின் மத்தியிலும், மேற்கிலும் மராத்திய நாட்டை உள்ளடக்கிய பெரும் பகுதியை ஆண்டனர்.
  • அவர்களின் தலைநகர் வாதாபி (பதாமி).

சாளுக்கியர்களில் நெருங்கிய தொடர்புடைய சார்பற்ற வம்சங்கள் இருந்தன.

  1. வாதாபிச் சாளுக்கியர்கள்
  2. வெங்கிச் சாளுக்கியர்கள்(கீழை)
  3. கல்யாணிச் சாளுக்கியர்கள் (மேலை)
  4. வடக்கே ஹர்ஷரின் பேரரசும், தெற்கே பல்லவ நாடும், கிழக்கே கலிங்கமும் (ஒடிசா) சாளுக்கியர்களின் எல்லையாக இருந்தன.

சான்றுகள்:

கல்வெட்டுக்கள்

  • மங்களேசனின் வாதாபி குகைக் கல்வெட்டு,
  • [[காஞ்சி கைலாசநாதர் கோவில்]] கல்வெட்டு,
  • பட்டடக்கல் விருப்பாக்ஷா கோவில் கல்வெட்டு
  • முதலாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு.

அயலவர் குறிப்புகள்

  • [[யுவான் சுவாங்]]கின் குறிப்புகள்

வாதாபிச் சாளுக்கியர்:

  • முதலாம் புலிகேசி, பிஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லில் ஒரு குறுநில மன்னராக இருந்தார்.
  • கி.பி.(பொ.ஆ) 543 - இல் வாதாபி மலைக்கோட்டையைக் கைப்பற்றி அதனைச் சுற்றி மதில் சுவர் எழுப்பினார்.
  • விரைவில் கிருஷ்ணா, துங்கபத்ரா ஆகிய நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியையும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளையும் கைப்பற்றினார்.
  • இவருடைய மகன் முதலாம் கீர்த்திவர்மன் (ஆட்சிக்காலம் கி.பி. (பொ.ஆ) 566 597) கொங்கணக் கடற்கரைப் பகுதியைச் சாளுக்கியரின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.
  • இரண்டாம் புலிகேசி (ஆட்சிக்காலம் கி.பி. 610 642) இவ்வம்சத்தின் மிகவும் வலிமை பெற்ற அரசராவார்.
  • பாரசீக (ஈரான்) அரசர் இரண்டாம் குஸ்ரூ இரண்டாம் புலிகேசியின் அவைக்குத் தூதுக்குழு ஒன்றை அனுப்பி வைத்தார்.
  • குஜராத், மாளவம் ஆகியவற்றின் சில பகுதிகளைக் கைப்பற்றுவதிலும் புலிகேசி வெற்றி பெற்றார்.
  • இவர் வட இந்திய அரசர் ஹர்ஷருக்கு அடிபணிய மறுத்தார். இவரும் ஒப்புக் கொண்ட புரிதலின்படி இருவருக்கும் இடையிலான எல்லையாக நர்மதை நதி வரையறை செய்யப்பட்டது.
  • கி.பி. 624 காலப்பகுதியில் வெங்கி அரசைக் கைப்பற்றிய இரண்டாம் புலிகேசி அதைத் தன்னுடைய சகோதரர் விஷ்ணுவர்த்தனருக்கு வழங்கினார்.
  • விஷ்ணுவர்த்தனர் முதல் கீழைச் சாளுக்கிய அரசரானார்.
  • கி.பி. (பொ.ஆ.) 641-647 காலப்பகுதியில் பல்லவர்கள் தாக்கணத்தைச் சூறையாடி வாதாபியைக் கைப்பற்றினர். ஆனால் கி.பி. 655 இல் சாளுக்கியர் அதனை மீட்டனர்.
  • முதலாம் விக்கிரமாதித்தனும் (கி.பி. (பொ.ஆ.) 655 680) அவருக்குப் பின் வந்த இரண்டாம் விக்கிரமாதித்தனும் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றினர்.
  • ஆனால் நகரைச் சேதப்படுத்தவில்லை.
  • இவருக்குப் பின்னர் அரச பதவியேற்ற இரண்டாம் கீர்த்திவர்மனை ராஷ்டிரகூட வம்ச அரசை நிறுவிய தந்தி துர்கா போரில் தோற்கடித்தார்.

அய்கோல் கல்வெட்டு:

  • அய்கோலிலுள்ள (பாகல்கோட் மாவட்டம், கர்நாடகா) மேகுதி கோவிலில் உள்ளது.
  • இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவரான ரவிகீர்த்தி என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது.
  • இக்கல்வெட்டு ஹர்ஷவர்த்தனர் இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது.

கல்யாணி மேலைச் சாளுக்கியர்:

  • வாதாபிச்‌சாளுக்கியரின் வழித்தோன்றல்கள்.
  • கல்யாணியைத் (தற்போதைய பவச கல்யாண்) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்.
  • இரண்டாம் தைலப்பர் என்பவர் ராஷ்டிரகூடர்களின் சிற்றரசாக பிஜப்பூர் பகுதியை ஆண்டு வந்தார்.
  • இவர் கி.பி. (பொ.ஆ) 973 இல் மாளவ அரசர்
  • பராமரரைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றினார்.
  • இவருடைய வம்சம் முதலாம் சோமேஸ்வரனின் ஆட்சியின்போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது.
  • முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை மன்யகேட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றினார்.
  • ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்தியாவிலிருந்த இரண்டு பேரரசுகளான மேலைச் சாளுக்கியர்களும், தஞ்சாவூர் சோழர்களும் வளம் நிறைந்த வெங்கியைக் கைப்பற்றுவதற்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டனர்.
  • பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆறாம் விக்கிரமாதித்யரின் காலத்தில் வடக்கே நர்மதை ஆற்றுக்கும், தெற்கு காவிரி ஆற்றுக்கும் இடைப்பட்ட பெரும்பகுதி சாளுக்கியரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

கலை மற்றும் கட்டடக்கலை

  • சைவம், வைணவம்
  • வெசாரா பாணியிலான கோவில் விமானங்களைக் கட்டும் முறை வளர்ச்சி பெற்றது.
  • இது தென் இந்திய (திராவிட) மற்றும் வட இந்திய (நாகாரா) கட்டடப் பாணிகளின் கலப்பு ஆகும்.
  • சாந்து இல்லாமல் கற்களை மட்டுமே கொண்டு கட்டிடங்களைக் கட்டும் தொழில்நுட்பத்தை அவர்கள் மேம்படுத்தினர்.
  • கட்டுமானத்திற்கு மிருதுவான மணற்கற்களைப் பயன்படுத்தினர்.
  • பெரும் எண்ணிக்கையிலானகுடைவரைக் கோயில்களையும், கட்டுமானக் கோவில்களையும் கட்டி சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய கடவுளர்களுக்கு அர்ப்பணித்தனர்.
  • சாளுக்கியர்களின் கட்டுமானக் கோவில்கள் அய்கோல், வாதாபி, பட்டடக்கல் ஆகிய இடங்களில் உள்ளன.
  • வாதாபி மற்றும் அய்கோலிலுள்ள விஷ்ணு கோவில்கள், பிஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லிலுள்ள விருபாக்ஷா கோவில் ஆகியன கற்களால் கட்டப்பட்ட கோவில்களாகும்.
  • வாதாபியிலுள்ள விஷ்ணு கோவில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த மங்கலேசனால் கட்டப்பட்டது.
  • இரண்டாம் விக்கிரமாதித்தனுடைய அய்கோல் கல்வெட்டு அங்குள்ளது.
  • அவர்களின் குகைக்கோவில்கள் அஜந்தா, எல்லோரா, நாசிக் ஆகிய இடங்களில் உள்ளன.
  • வாதாபியிலுள்ள குகைக் கோவில்களில் சேஷநாகர் மீது சாய்ந்திருக்கும் விஷ்ணு, விஷ்ணுவின் வராக, நரசிம்ம, (பாதி சிங்கம் பாதி மனிதன்) வாமன (குள்ள) அவதாரங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
  • நேர்த்திமிக்க சிற்பங்களாகச் லாக்கண்டியிலுள்ள காசி விஸ்வேஸ்வரர் கோவில், குருவட்டியிலுள்ள மல்லிகார்ஜுனா கோயில், பகலி என்னுமிடத்திலுள்ள கள்ளேஸ்வரர் இட்டகியிலுள்ள மகாதேவா கோவில் ஆகியவை.
  • ஓவியங்களில் சாளுக்கியர் வாகடகர் பாணியைப் பின்பற்றினர்.
  • அஜந்தா குகைகளில் காணப்படும் சில சுவரோவியங்கள் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தவை,
  • பாரசீகத் தூதுக்குழுவை இரண்டாம் புலிகேசி வரவேற்பது போன்றதொரு காட்சி அஜந்தா ஓவியமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பட்டடக்கல்:.

[[யுனெஸ்கோ]] உலகப் பாரம்பரியச் சின்னம்.

  • பட்டடக்கல் கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள ஓர் சிற்றூர் ஆகும்.
  • அங்கு 10 கோவில்கள் உள்ளன. அவற்றில் நான்கு வட இந்திய பாணியான நாகாரா பாணியிலும் மற்றமுள்ள ஆறு தென்னிந்திய திராவிட பாணியிலும் கட்டப்பட்டுள்ளன.
  • விருப்பாக்ஷா கோவிலும் சங்கமேஸ்வரா கோவிலும் திராவிடப் பாணியிலும்
  • பாப்பநாதர் கோவில் நாகாரா பாணியிலும் அமைந்துள்ளன.
  • விருப்பாக்ஷா கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
  • இக்கட்டுமானப் பணியில் காஞ்சிபுரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.