சந்திப்-பிழையை-நீக்குதல்

வல்லினம் மிகும் இடங்கள்

இரண்டாம் வேற்றுமை விரியில்

இரண்டாம் வேற்றுமை - ஐ

  • நூலை படி - நூலைப் படி

நான்காம் வேற்றுமை விரியில்

நான்காம் வேற்றுமை - கு

  • பூட்டுக்கு சாவி - பூட்டுக்குச் சாவி

வன்தொடர் குற்றியலூகரத்தின் பின் இருவகை புணர்சியிலும்

வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் வன்தொடர்க் குற்றியலுகரம் .

  • வாக்கு கொடு - வாக்குக் கொடு

ஓரெழுத்து ஒரு மொழியின் பின்

  • தை பொங்கல் - தைப்பொங்கல்

தனிக்குறிலை அடுத்து வரும் ஆ எனும் நெடிலுக்கு பின்

  • பலா சுளை - பலாச்சுளை

பண்புத் தொகையில்

  • பச்சை பட்டு - பச்சைப் பட்டு

இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்

  • மார்கழி திங்கள் - மார்கழித்திங்கள்

மற்ற, இனி, தனி, மற்று, மற்றை எனும் சொற்களுக்கு பின்

  • தனி காடு - தனிக்காட்டு

உரிச்சொற்களின் பின்

  • தவ பயன் - தவப்பயன்

அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி, அங்கு, இங்கு, எங்கு சொற்களுக்குப் பின்

  • இந்த படம் - இந்தப்படம்

ஆய், போய் எனும் வினையெச்சங்களுக்குப் பின்

  • போய் சேர்ந்தான் - போய்ச்சேர்ந்தான்

ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தின்

  • ஒடா புலி - ஓடாப்புலி

முற்றியலுகர சொற்களுக்குப் பின்

  • திரு குறள் - திருக்குறள்

உயிரீற்றுச் சொற்களின் பின்

  • பனி துளி - பனித்துளி

எட்டு, பத்து எண்களுக்குப் பின்

  • எட்டு தொகை - எட்டுத்தொகை

வல்லினம் மிகாத இடங்கள்

பெயரெச்சத்தின் முன்

  • வந்த புத்தகம்,படித்த பையன், புதிய பொம்மை

மூன்றாம், ஆறாம் வேற்றுமை விகுதி முன்

  • அவனது நோட்டு, எனது சட்டை, கண்ணனோடு விளையாடு.

சுட்டுப் பெயர்களின் முன் வல்லினம்

  • அது சிறியது, இது பெரியது

எட்டு, பத்து தவிர மற்ற எண்களின் முன்

  • ஒரு பேனா, நான்கு கால்கள், ஏழு கடல்

இரண்டாம் வேற்றுமைத் தொகையின் முன்

  • கதை சொன்னான், காடு கடந்தான்

என்று என்னும் சொல்லின் முன்

  • என்று கூறினார், என்று சொன்னான்

ஈறுகெடாத பெயரெச்சத்தின் முன்

  • ஒடாத குதிரை, ஆடாத பொம்மை

உம்மைத் தொகையில்

  • தாய்தந்தை, செடிகொடி

எழுவாய்ப் பெயர்

  • கண்ணகி கண்டாள், நம்பி பார்

வினைத்தொகையின்

  • ஊறுகாய், சுடுகாடு

பலவகை வினை எச்சங்களின் முன்

  • நடந்து போனான், உண்டு களித்தான், சோர்ந்து போனான்

ஆ, யா, ஒ, ஏ என்னும் விளா இடங்களில்

  • அவளா பேசியது, காயோ கனியோ

படி என்னும் சொல் வருமிடத்தில்

  • அதன்படி நட, சொன்னபடி கேள்

வினைமுற்றுகளின் முன்

  • பறந்தன பறவைகள், வந்தன கூட்டம்

விளிப்பெயர், ஏவல், முன்னிலை வினைமுற்று

  • வா தம்பி, போ, தம்பி

சிறிய, பெரிய என்ற சொற்களின் முன்

  • சிறிய கடை, பெரிய பை, பெரிய கோவில்