சங்க-காலம்

  • சங்கம் என்னும் சொல் மதுரைப் பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய தமிழ்ப் புலவர்களின் குழுமத்தைச் சுட்டுகிறது.
  • இப்புலவர்கள் இயற்றிய பாடல்கள் மொத்தமாகச் சங்க இலக்கியம் என அறியப்படுகிறது.
  • இப்பாடல் இயற்றப்பட்ட காலம் சங்க காலம் அழைக்கப்படுகிறது.
  • ஆறுமுக நாவலர் (யாழ்ப்பாணம்) தாமோதரம் பிள்ளை (யாழ்ப்பாணம்) உ.வே.சாமிநாத அய்யர் ஆகியோர் அரும்பாடுபட்டு பனையோலைகளில் எழுதப்பட்டிருந்த இலக்கியங்களையும், தமிழ் செவ்வியல் பண்டையக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளைச் செலவிட்டனர்.

சான்றுகள்:
கல்வெட்டுக்கள்:

  • கலிங்கநாட்டு அரசன் காரவேலனுடைய ஹதிகும்பா கல்வெட்டு
  • புகளூர் (கரூர்க்கு அருகே) கல்வெட்டு
  • அசோகருடைய இரண்டு மற்றும் பதிமூன்றாம் பேராணைக் கல்வெட்டுகள்
  • மாங்குளம், அழகர் மலை, கீழவளவு ஆகிய ஊர்களிலுள்ள (இவ்வூர்கள் அனைத்தும் மதுரைக்கு அருகேயுள்ளன) கல்வெட்டுக்கள்.

செப்புப் பட்டயங்கள்:

வேள்விக்குடி மற்றும் சின்னமனூர் செப்பேடுகள்.

நாணயங்கள்:

  • சங்க காலத்தைச் சேர்ந்த சேர, சோழ, பாண்டிய அரசர்களாலும், குறுநில மன்னர்களாலும் வெளியிடப்பட்ட நாணயங்களும்,
  • ரோமானிய நாணயங்களும்.

பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள்:

புதைவிடங்கள், நடுகற்கள்

அகழ்வாய்விலிருந்து கிடைத்த இடங்கள்:
பொருட்கள்

ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், புகார், கொற்கை, அழகன்குளம், உறையூர்.

அயல்நாட்டவர் குறிப்புகள்:

  • The Periplus of Erythrean Sea
  • [[பிளினி]]யின் இயற்கை வரலாறு (Natural History)
  • [[தாலமி]]யின் புவியியல் (Geography),
  • [[மெகஸ்தனிஸ்]]ன் இண்டிகா
  • ராஜாவாளி, மகாவம்சம், தீபவம்சம் .

கால அளவு:

கி.மு. (பொ.ஆ.மு.) 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. (பொ.ஆ.) 3-ம் நூற்றாண்டு வரை,

தமிழகத்தின் புவியியல் பரப்பு:

வடக்கே வேங்கடம் (திருப்பதி) முதல் தெற்கே கன்னியாகுமரி வரை.

கிழக்கிலும், மேற்கிலும் கடல்களை எல்லைகளாகக் கொண்டிருந்தது.

காலம்: இரும்புக் காலம்.

பண்பாடு: பெருங்கற்காலப் பண்பாடு.
அரசுமுறை: முடியாட்சி

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின்
தமிழ்மொழிப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்
என்பவர் தமிழ்மொழியானது [[இலத்தீன்]] மொழியின் அளவிற்குப் பழமையானது எனும் கருத்தைக் கொண்டுள்ளார்.