கேட்கிறதா-என்குரல்

மென்துகிலாய் உடல்வருடி வாஞ்சையுடன் மனம்வருடி பகலெரிச்சல் பணக்கவலை பயக் குழப்பம் மொட்டை மாடித்தனியிரவில் நட்சத்திரக் கணக்கெடுப்பில் மறுபடியும் தவறவிட்ட தாளாத தன்னிரக்கம் இவை எல்லாமே எளிதாகக் கரைந்து போகும் மாயங்கள் செய்கின்ற பூங்காற்றே!
இத்தனை நாள் உனைப் பாடாதிருந்து விட்டேன் புதுக் கவிதையில் சிக்கிப் போனேன்.
தேவகோட்டை வா.மூர்த்தி

  • பருவக்காற்றின் பயனை உலகிற்கு உனர்த்தியவர் - கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ்

  • உலக காற்றாலை மின் உற்பத்தி - இந்தியா 5ம் இடம்

  • இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்.

  • காற்று மாசுபாட்டில் இந்தியா இரண்டாமிடம்

  • இந்தியாவில் உயிரிழப்புக்கான காரணங்களில் காற்று மாசுபாட்டுக்கு ஐந்தாயிரம்

  • CFC க்கு மாற்று HC

  • கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு - அமில மழை

  • June 15 உலக காற்று தினம்

  • 70% மழை - தென்மேற்கு பருவக்காற்று

  • மனிதன் உணவின்றி 5 வாரம் உயிர்வாழ முடியும்.
    மனிதன் நீரின்றி 5 நாள்கள் உயிர் வாழ முடியும்.

  • கி.பி.முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸ் எனும் கிரேக்க மாலுமி பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார்.

  • ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.

  • வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.

  • புதுதில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.

  • வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.

  • இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), கடைசியாக லெஹர் (அலை). இன்னும் வரவிருப்பவை மேக், சாஹர், வாயு. ‘கஜா’ புயலின் பெயர் இலங்கை தந்தது. அடுத்து வந்த ‘பெய்ட்டி’ புயல் பெயர் தாய்லாந்து தந்தது.

  • இடம்புரிப் புயலும் வலம்புரிப் புயலும்

  • நிலநடுக்கோட்டின் வடக்குப் பகுதியில் வீசும் காற்றை வலப்புறமாகத் திருப்பும். தெற்குப் பகுதியில் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்பும்.

  • வங்கக் கடலில் வீசும் புயலும், அமெரிக்காவை, ஜப்பானை, சீனாவைத் தாக்கும் புயல்களும் இடம்புரிப் புயல்கள்!

  • ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள்!

  • பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் இந்த விளைவை 1835இல் கண்டுபிடித்தார். புயலின் இந்த இருவகைச் சுழற்சிக்குக் கொரியாலிஸ்
    விளைவு என்று பெயர்.

  • தென்மேற்குப் பருவக்காற்று - ஜூன் முதல் செப்டம்பர்

  • வடகிழக்குப் பருவக்காற்று அக்டோபர் முதல் டிசம்பர்

  • “வளி மிகும் வலி இல்லை”