- அகப்பொருள்
- கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டது.
- நான்கடிச் சிற்றெல்லை யும் எட்டடிப் பேரெல்லையும்.
- 1915ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன்முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.
- ஆசிரியர் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’. இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்;
- கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’ என அழைக்கப் பெற்றார்.
பாடப் பகுதி
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்பிடிபசி களைஇய பெருங்கை வேழம்மென்சினை யாஅம் பொளிக்கும்அன்பின தோழி அவர் சென்ற ஆறே. (37)
திணை: பாலை
துறை: தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றியது.
இறைச்சி அமைந்துள்ளது.
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ”
என்ற குறுந்தொகை (118)
குறுந்தொகை
இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ
- “பாலொடு வந்து கூழொடு பெயரும்…” என்று கூறும் நூல் - குறுந்தொகை
சிறகிழந்த நாரை
தலைவி மீதான தலைவனின் அன்பும், சிறகிழந்த நாரையாய்த் தலைவிக்காக அவன் வருந்துவதையும் காட்டும் பரணரின் ஓர் அகத்திணைப்பாடல்,
குணகடல் திரையது பறைதபு நாரை திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச் சேயள் அரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.
குறுந்தொகை.128
கீழ்க்கடலில் எழுந்த அலைக்கு அருகில்நின்ற, முதுமையால் சிறகிழந்த நாரையொன்று, சேரனது மேல்கடற்கரையிலமைந்த தொண்டியென்னும் நகரில் உள்ள பெறற்கரிய உணவாகிய அயிரை மீனைப்பெற வருந்தியிருந்தது. அதுபோல, பெறற்கரியவளாகிய தலைவியைப் பெறும்பொருட்டுத் தலைவனின் நெஞ்சமும் வருந்தியிருந்ததாம்.