குப்தர்கள்

[[குடி - பேரரசு]]

குப்த அரச வம்சம் நிறுவப்படல்:

  • இரண்டாவது இந்தியப் பேரரசாகும்.
  • நிறுவியவர் ஸ்ரீகுப்தர்
  • தற்போதைய வங்காளம், பீகார் பகுதிகளை ஆண்டதாகக் கருதப்படுகிறது.
  • நாணயங்களில் முதன் முதலாக இடம்பெற்ற குப்த அரசரின் வடிவம் இவருடையதே.
  • அடுத்து வந்தவர் கடோத்கஜன்.
  • கல்வெட்டுகளில் இவர்கள் இருவருமே மகாராஜா
  • கடோத்கஜனின் மகன் முதலாம் சந்திரகுப்தர் குப்த அரசை பேரரசாக மாற்றினார்.

முதலாம் சந்திரகுப்தர் (319 - 335):

  • முதலாம் சந்திரகுப்தர், புகழ்பெற்ற, வலிமை மிகுந்த ‘லிச்சாவி’ அரச குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்தார்.

  • தங்க நாணயங்களில் சந்திரகுப்தர், குமாரதேவி ஆகிய இருவரின் உருவங்கள் இடம்
    பெற்றுள்ளன.

  • ‘லிச்சாவையா’ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.

  • லிச்சாவி பழமையான கன சங்கங்களின் ஒன்றாகும். அதனுடைய ஆட்சிப்பகுதி கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்டதாக இருந்தது.

  • மகாராஜாதி ராஜா அல்லது அதிராஜா

  • மெஹ்ருளி இரும்புத் தூண் கல்வெட்டு அவரது போர் வெற்றிகள்.

சமுத்திரகுப்தர் (கி.பி 335 - 380):

  • குப்த அரச வம்சத்தின் தலை சிறந்த அரசர் ஆவார்.

  • சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவரான ‘ஹரிசேனர்’ இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) அலகாபாத் தூணில் 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.

  • பிரசஸ்தி/ மெய்க்கீர்த்தி:
    பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் ‘புகழ்வதாகும்’.

  • தென்னிந்தியாவில் பல்லவநாட்டு அரசர் விஷ்ணுகோபனை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார்.

  • வட இந்தியாவில் சமுத்திரகுப்தர் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார்.

  • தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 அரசர்களைத் தனக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக்கிய அவர்களைக் கப்பம் கட்டச் செய்தார்.

  • கிழக்கு வங்காளம், அஸ்ஸாம், நேபாளம், பஞ்சாபின் கிழக்குப்பகுதி ஆகியவற்றின் அரசர்களும் ராஜஸ்தானைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் சமுத்திரகுப்தரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.

  • சமுத்திரகுப்தர் ஒரு விஷ்ணு பக்தராவார்.

  • அஸ்வமேத யாகம்.

  • தங்க நாணயம் ஒன்றில் அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

  • குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் சமுத்திரகுப்தர் ஆவர்.

  • குஷாணர்களின் நாணயங்கள் சமுத்திர குப்தருக்கு உந்துதலை வழங்கின.

  • ‘கவிராஜா’ எனும் பட்டம் பெற்றார்.

  • இலங்கையின் ஸ்ரீ மேகவர்ணன் எனும் பௌத்த அரசன் சமகாலத்தவராவார்.

இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி. 380 - 415)

  • விக்கிரமாதித்யர் என்றும் அறியப்பட்டார்.
  • குபேரநாகா, துருபசுவாமினி ஆகிய இருவரும் இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியர் எனக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
  • அவர் சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவத்தையும், கைப்பற்றினார்.
  • குஜராத்தையும் தென்னிந்திய அரசுகளோடு அவர் நட்புறவைப் பேணினார்.
  • குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் விக்கிரமாதித்யரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது.
  • இவருடைய ஆட்சியின்போது பாகியான் எனும் சீன பௌத்த அறிஞர் இந்தியா வந்தார்.
  • (நவரத்தினங்கள்) இவருடைய அவையை அலங்கரித்ததாகக் கூறப்படுகிறது.
  1. காளிதாசர் - சமஸ்கிருதப் புலவர்
  2. ஹரிசேனர் - சமஸ்கிருதப் புலவர்
  3. அமர சிம்ஹர் அகராதியியல் ஆசிரியர்
  4. தன்வந்திரி - மருத்துவர்
  5. காகபானகர் - சோதிடர்
  6. சன்கு- கட்டடக் கலை நிபுணர்
  7. வராகமிகிரர் - வானியல் அறிஞர்
  8. வராச்சி இலக்கண & சமஸ்கிருதப் புலவர்
  9. விட்டல்பட்டர் மாயவித்தைக்காரர்

இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப் பெயர்கள்:
விக்கிரமாதித்தியர், நரேந்திர சந்திரார், சிம்ம சந்திரர், நரேந்திர சிம்மர், விக்கிரம தேவராஜர், தேவ குப்தர், தேவஸ்ரீ.

பாகியான்:

  • இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தில், சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி பாகியான் இந்தியாவிற்கு வந்தார்.

  • பாகியான் கூற்றுப்படி மகதத்து மகிழ்ச்சியோடும், செழிப்போடும் வாழ்ந்தனர்.

  • கடுமையான தண்டனையின்றி நீதி வழங்கப்பட்டது.

  • மரணதண்டனை வழங்கப்படவில்லை.

  • கயா பாழடைந்திருந்தது.
    கபிலவஸ்து காடாகியிருந்தது. ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.

குமார குப்தர்

  • நாளந்தா பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர்.

நாளந்தா பல்கலைக்கழகம்:

  • நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசின் ஆதரவில் தழைத்தோங்கியது.

  • கன்னோசியைச் சேர்ந்த பேரரசர் ஆதரவில் சிறப்புற்றது. பின்னர் ஹர்ஷரின்

  • நாளந்தாவில் பௌத்தத் தத்துவமே முக்கியப் பாடப்பிரிவாக இருந்தது.

  • யோகா, வேத இலக்கியங்கள், மருத்துவம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன.

  • அப்பல்கலைக்கழகத்தில் யுவான் சுவாங் பௌத்த தத்துவத்தைப் பற்றிப் படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார்.

  • அந்த வளாகத்தில் எட்டு மகாபாடசாலைகளும், மூன்று மிகப்பெரிய நூலகங்களும் இருந்தன.

  • நாளந்தா பல்கலைக்கழகம் பக்தியார்கில்ஜி என்பவரின் தலைமையில் வந்த மம்லுக்குகள் என அழைக்கப்பட்ட துருக்கிய இஸ்லாமிய அடிமை வீரர்களால் அழித்துத்தரைமட்டம் ஆக்கப்பட்டது.

  • நாளந்தா யுனெஸ்கோவின் உலகப்பாரம்பரியச் சின்னமாகும்.

ஸ்கந்தகுப்தர்

  • ஹூணர்களின் படையெடுப்பைச் சந்திக்க நேரிட்டது. அவர் அவர்களைத் தோற்கடித்து விரட்டி அடித்தார். ஆனால் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் படையெடுத்து வந்த ஹூணர்கள் குப்தப் பேரரசை தோற்கடித்தனர்.
  • ஹூணர்கள் நாடோடிப் பழங்குடியினராவர்.
  • ஸ்கந்தகுப்தரை தோற்கடித்த பின்னர் இவர்கள் மத்திய இந்திய பகுதிகளில் பரவினர்.
  • அவர்களின் தலைவரான தோரமானர் தனக்கு தானே அரசராக முடி சூட்டிக் கொண்டார்.
  • அவருக்கு பின்னர் அவரது மகன் மிகிரகுலர் ஆட்சி செய்தார்.
    முடிவில், மத்திய இந்தியாவில் மாளவத்தை ஆட்சி செய்துவந்த யசோதர்மன் அவர்களை தோற்கடித்து அவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டினார்.

பாலாடித்யர் - முதலாம் நரசிம்ம குப்தர்

  • மிகச் சிறந்த குப்தப் பேரரசர்களின் கடைசிப் பேரரசரான என்ற பெயரில் அரியணை ஏறினார். இவர் பௌத்த மதத்தால் ஈர்க்கப்பட்டவராவார். இவர் மிகிரகுலருக்கு கப்பம் கட்டிவந்தார். ஆனால் பௌத்தத்தைப் பகைமையோடு மிகிரகுலர் பார்த்ததால் மனவேதனை அடைந்து கப்பம் கட்டுவதை நிறுத்தினார்.
    மிகிரகுலரைக் கைது செய்து சிறையில் அடைப்பதில் பாலாதித்யா வெற்றி பெற்றாலும் மிகிரகுலர் வஞ்சகமாக மகதத்திலிருந்து வெளியேற்றினார்.

  • குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் விஷ்ணுகுப்தர் ஆவார்.

குப்தர்களின் ஆட்சி அமைப்பு:

  • குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.

  • குப்த அரசர்கள் அரசியல், நிர்வாகம், இராணுவம், நீதிவழங்கல் ஆகிய துறைகளில் பெருமளவிலான அதிகாரம் பெற்றுத் திகழ்ந்தனர்.

  • உயர்பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் ‘தண்டநாயகர்’ மற்றும் ‘மகாதண்ட நாயகர்’ என அழைக்கப்பட்டனர்.

  • குப்தப்பேரரசு ‘தேசம்’ அல்லது ‘புக்தி’ - பிராந்தியங்கள் - ‘உபாரிகா’ எனும் ஆளுநர்கள்

  • ‘விஷ்யா’ எனும் மாவட்டங்கள்

    • விஷ்யாபதிகள்
  • கிராமம் - கிராமிகா, கிராமதியாகஷா

  • முத்திரைகளிலும், கல்வெட்டுக்களிலும் இராணுவப் பதவிகளின் பெயர்கள்

  • பாலாதிகிரிதா- காலாட்படை தளபதி

  • மஹாபாலாதிகிரிதா - குதிரைப் படை.

  • ‘தூதகா’ எனும் ஒற்றர்கள்

நிலம் மற்றும் விவசாயிகள்:

  • காமாந்தகரால் எழுதப்பட்ட நிதிசாரம் எனும் நூல் அரசுக் கருவூலத்தின் முக்கியத்துவத்தையும், வருமானத்திற்கான குறிப்பிடுகின்றது. பல வழிகளையும்
  • சமுத்திரகுப்தரைப் போன்ற அரசர்களின் படையெடுப்பு நடவடிக்கைகளில், உபரியே முதலீடு செய்யப்பட்டது.
  • நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது.
  • விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக இருந்தது. அவர்கள் பல்வேறு வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் இருந்தனர். அவர்கள் கொத்தடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
  • குப்தர் காலத்தில் நிலங்கள்
  • சேஷத்ரா - வேளாண்மை நிலங்கள்
  • கிலா - தரிசு நிலங்கள்
  • அப்ரகதா வனம் அல்லது காட்டு நிலங்கள்
  • வஸ்தி - குடியிருப்பு நிலங்கள்
  • கபத சரகா - மேய்ச்சல் நிலங்கள்

வணிகமும், வர்த்தகமும்:

  • சிரேஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள்.

  • சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்.

  • மிளகு, தங்கம், செம்பு, இரும்பு, குதிரைகள், யானைகள் ஆகியவை முக்கிய வணிகப் பொருட்களாகும்

  • குப்தர்காலத்தில் அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கும் முறை நடைமுறையில் இருந்தது.

  • நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் சாலைகளைக் குப்தர்கள் அமைத்தனர்.
    பாடலிபுத்திரம், உஜ்ஜைனி, வாரணாசி, மதுரா ஆகியன முக்கிய வணிக நகரங்களாக இருந்தன.

  • இந்தியாவில் உள்ள மேலைக் கடற்கரைத் துறைமுகங்களும், (கல்யாண், மங்களூர், மலபார்) கீழைக் கடற்கரைத் துறைமுகமும் (வங்காளத்திலிருந்த தாமிரலிப்தி) வணிகப் பெருக்கத்திற்கு உதவின.

  • குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்றழைக்கப்பட்டன.

  • குப்தர்கள் வெளியிட்ட பொற்காசுகளை விட வெள்ளி, செப்புக்காசுகள் குறைவாகவே வெளியிடப்பட்டன.

  • குப்தர்களுக்கு அடுத்து வந்த காலத்தில் பொற்காசுகளின் சுழற்சியில் வீழ்ச்சி ஏற்பட்டது.

உலோகவியல்:

  • குப்தர்கள் காலத்தில் சுரங்கத் தொழிலும்
    உலோகத் தொழிலும் செழிப்புற்று விளங்கின.

  • குப்தர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள்: இரும்பு, தங்கம், தாமிரம், தகரம், ஈயம், பித்தளை, செம்பு, வெண்கலம், மைக்கா, மாங்கனீசு, சிகப்புச் சுண்ணம் ஆகியவையாகும்.

சமூகம்:

  • குப்தர் காலச் சமூகம் நான்கு வர்ணங்களைக் கொண்ட வர்ண முறையில் அமைந்திருந்தது.

  • அது தந்தைவழிச் சமூகமாக இருந்தது.
    ‘மனு’வின் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன. அவற்றின்படி பெண்கள், தந்தையின், கணவனின் அல்லது மூத்த மகனின் பாதுகாப்பில் இருத்தல் வேண்டும்.

  • பலதார மணம் பரவலாக நடைமுறையில் இருந்தது.

  • உடன்கட்டை (சதி) ஏறும் முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றப்பட்டது.

அடிமை முறை:

  • இந்தியாவில் அடிமை முறை மேலைநாடுகளில் இருந்தது போல ஒரு நிறுவனமாக இல்லை.

மதம்:

  • வேத மதமும், வேதச் சடங்குகளும் புத்துயிர் பெற்று, மீண்டும் நடைமுறைக்கு வந்தன.

  • சமுத்திரகுப்தரும், முதலாம் குமாரகுப்தரும் அஸ்வமேத யாகம் (குதிரைகளைப் பலி கொடுத்துச்
    செய்யப்படும் வேள்வி) நடத்தினர்.

  • குப்தர்கள் காலத்தில் தான் உருவ வழிபாடு தொடங்கியதையும் வைணவம், சைவம் ஆகிய இரு
    பிரிவுகள் தோன்றியதையும் காண்கிறோம்.

  • ஹீனயானம், மகாயானம் எனப் பௌத்தம் இரண்டாகப் பிரிந்தாலும் அது தொடர்ந்து வளர்ந்து வந்தது.

கலையும் கட்டடக்கலையும்:

  • கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் .
  • கோபுரங்களோடும், விரிவான செதுக்கு வேலைப்பாடுகளோடும் அனைத்து இந்து தெய்வங்களுக்கும் கோவில்கள் கட்டப்பட்டன.
  • மிகவும் குறிப்பிடத்தக்க பாறைக் குடைவரைக் குகைகள் அஜந்தா, எல்லோரா (மகாராஷ்டிரா), பாக் (மத்தியப் பிரதேசம்), உதயகிரி (ஒடிசா)
  • இக்காலப் பகுதியில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள், திராவிட பாணிக் கூறுகளை ஒத்திருக்கின்றன.

உலோகச் சிற்பகலை -

நாளந்தா - 18 அடி புத்தரின் செப்புச் சிலை.
சுல்தான் கஞ்ச் - 7½ அடி புத்தர் உலோக சிலை

ஓவியக் கலை - அஜந்தா குகை, குவாலியர் பாக் குகை

தொல்லியல் சான்றுகள்:

  • குப்த அரசர்களால் வெளியிடப்பட்ட தங்க, வெள்ளி, செப்பு நாணயங்கள்.
  • சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு.
  • இரண்டாம் சந்திரகுப்தரின் உதயகிரி குகைகள் கல்வெட்டு, மதுரா பாறைக் கல்வெட்டு, சாஞ்சி பாறைக் கல்வெட்டு.
  • ஸ்கந்த குப்தரின் பிதாரி தூண் கல்வெட்டு.
  • கத்வா பாறைக் கல்வெட்டு.
  • மதுபான் செப்புப் பட்டயம்.
  • சோனாபட் செப்புப் பட்டயம்
  • நாளந்தா களிமண் முத்திரைப் பொறிப்பு

இலக்கிய சான்றுகள்

  • விஷ்ணு, மத்சய, வாயு, பாகவத புராணங்கள்,
  • நாரதரின் நீதிசாஸ்திரம்.
  • விசாகதத்தரின் தேவிச்சந்திர குப்தம் முத்தா ராக்ஸம்,
  • பாணரின் ஹர்டி சரிதம்.
  • ஹர்ஷரின் ரத்னாவாளி, நாகநந்தா, பிரியதர்ஷிகா.
  • யுவான் சுவாங்கின் சி-யூ-கி.
  • பிராகிருதம் மக்களால் பேசப்படும் மொழி
  • சமஸ்கிருதத்தை அலுவலகமொழி
  • கல்வெட்டுக்கள் - சமஸ்கிருதம்

சமஸ்கிருத இலக்கண வளர்ச்சி.

பாணினி - ‘அஷ்டதியாயி’

பதஞ்சலி - ‘மகா பாஷ்யம்’

வங்காளத்தின் சந்திரோகோமியா எனும் பௌத்த அறிஞர் ‘சந்திர வியாகரணம்’ என்ற இலக்கண நூல்.

காளிதாசர்

நாடக நூல்கள்: சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியம் .

மற்ற நூல்கள்: மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம் .

  • பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பும், தசம எண் முறையும்
  • ஆரியபட்டர், வராகமிகிரர், பிரம்மகுப்தா கணிதவியல், வானியல் அறிஞர்கள்

ஆரியப்பட்டர்

  • ‘சூரிய சித்தாந்த’வில் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார்.
  • பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர்.

தன்வந்திரி - புகழ் பெற்ற மருத்துவர்‌.ஆயுர்வேத மருத்துவத்தில் நிபுணராகத் திகழ்ந்தார்.

சாரக்கர் ஒரு மருத்துவ அறிவியல் அறிஞராவார்.

சுஸ்ருதர் அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர் ஆவார்.

  • நாளந்தா என்னும் மூன்று சமஸ்கிருத சொற்களின் நா+அலம்+தா என்ற மூன்று சமஸ்கிருத சொற்களின் இணைப்பில் உருவானது.இதன் பொருள் ‘வற்றாத அறிவை அளிப்பவர்’ என்பதாகும்.