குண்டலகேசி

  • 224 பாடல்கள்
  • 8 ஆம் நூற்றாண்டு
  • விருத்தப்பா
  • குண்டலகேசி என்றால் சுருண்ட முடியுடையவள் என்று பொருள்
  • துறவியானபோது களைந்த கூந்தல் மீண்டும் வளர்ந்து சுருளாக தொங்கியதால் குண்டலகேசி
  • குண்டலகேசியின் பெயர் பத்தரை
  • குண்டலகேச விருத்தம், அகலகவி என்ற வேறுபெயர்களும் உண்டு.
  • 25 பாடல்களே கிடைத்துள்ளன.
  • குண்டலகேசி சாரிபுத்தரிடம் தோற்றுப் புத்த சமயத்தை தழுவினார்.
  • காளன் என்ற கள்வனை மணம்புரிய பத்திரை என்ற வணிக குலப்பெண் விரும்புகிறாள். திருமணத்திற்குப் பின் பத்திரை சினம் கொண்டிருந்த வேளையில் காளனை “கள்வன் தானே” என்று கூறி விடுகிறாள். பத்திரையை கொல்ல மலையுச்சிக்கு அழைத்துச் செல்கின்றான். அவனது சூழ்ச்சியை அறிந்து கொண்ட பத்திரை “தற்கொல்லியை முற்கொல்” என்று தனது கணவரை கொலை செய்வாள். பின்னர் அவள் தனது மயிரை நீக்கி புத்த துறவியாகிறாள். கண்ணகி 😑
  • குண்டலகேசிக்கு எதிராக பாடப்பட்ட நூல் நீலகேசி

மேற்கோள்:-

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்பும் இன்னே
மேல் வரும் மூப்புமாகி
நாளும் நாம்சாகின் றாமால்;
நமக்குநாம் அழாதது என்னோ?