கியாசுதீன்-பால்பன்

  • துருக்கிய இல்பாரி இனத்தை சேர்ந்த இவர் [[இல்துமிஷ்]] இடம் அடிமையாக விற்கப்பட்டார்.

  • இயற்பெயர்:-உலுக்கான் (பலம் பொருந்திய பிரபு)

  • 1254-ல் வடமேற்கில் ஷிவாலிக் ஆட்சி பகுதியின் தளபதியாக இருந்த உலுக்கான் தில்லியைக் கைப்பற்றினார்.

  • 1265 (அ) 1266-ல் ஆட்சியில் அமர்ந்தார்.

  • இல்துமிஷ் ஆட்சியில் அடிமையாகவும், இளைஞராகவும், சுல்தானுக்கு துணையாகவும் இருந்ததால் ஆட்சி அதிகார பிரதிநிதி என பொருள் தரும் “நயிப்-இ-முல்க்” என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்.

துக்ரில்கானுக்கு எதிரான படையெடுப்பு

  • பால்பனுக்கு பிடித்த அடிமை துக்ரில்கானை வங்கத்தின் ஆளுநராக நியமனம் செய்தார்.
  • பிறகு துக்ரில் கான் பால்பனுக்கு எதிராக கலகம் செய்தார்.
  • கலகத்தை அடக்க ஆளுநர் அமீர்கானை அனுப்பினார். அவர் தோல்வி அடைந்ததால் மாலிக் தார்க்கி என்பவரை அனுப்பினார். அவரும் தோல்வி அடைந்தார்.
  • கோபமுற்ற பால்பன் தன் இளைய மகன் “புக்ரா கான்”-ஜ அழைத்து கொண்டு போகும்போது துக்ரில் கான் தப்பி ஓடினார்.
  • அவரை பிடிக்க படைகள் லக்நௌதிக்கும், திரிபுராவிற்கும் சென்றது.
  • ஒரிஷாவில் கண்டறியப்பட்ட துக்ரில்கான் கொலை செய்யப்பட்டு லக்நௌதி நகரம் சூறையாடப்பட்டது.

மங்கோலியரை எதிர் கொள்ளல்

  • மங்கோலியரை எதிர்கொள்ளும் விதமாக இராணுவத்தை பால்பன் பலப்படுத்தியதோடு படின்டா, சுனம், சாமனா ஆகிய இடங்களில் கூடுதல் படையை நிலை நிறுத்தினார்.
  • அதே நேரத்தில் ஈரானின் மங்கோலிய பொறுப்பு ஆளுநரும், செங்கிஸ்கானின் பேரணுமான குலுகுகான் உடன் நல்லுறவு ஏற்படுத்த முயற்சி செய்தார்.
  • ஹிலுக்கானிடமிருந்து மங்கோலியர் சட்லஜ்” நதிக்கு அப்பால் முன்னேறி வரமாட்டோம் என்ற வாக்கிறுதியை பெற்றார் பால்பண்.
  • ஆனால் ஹிலுக்கான் 1259-ல் தில்லிக்கு ஒரு நல்லெண்ணக் குழுவை அணுப்பி வைத்து குறிப்பால் உணர்த்தினார்.
  • மங்கோலியரிடமிருந்து எல்லை பகுதியை காக்க தனது விருப்பத்திற்குரிய மகன் முகமது கான் யை நியமித்தார்.
  • ஹிலுக்கானுடன் நல்லுறவு இருந்தாலும், மங்கோலியருடன் ஏற்பட்ட மோதலில் முகமது கான் கொல்லப்பட்டார்.
  • மணமுடைந்த பால்பன் கி.பி. 1286 (அ) 1287-ல் இறந்தார்.

பால்பணும் சட்ட ஒழுங்கும்

  • தோ ஆப் பகுதியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்ததோடு, ராஜபுத்திர ஜமின்தார்கள் கோட்டைகள் அமைத்து சுல்தானிய ஆணைகளை மீறினர்.

  • வடமேற்கு மேவாரை சுற்றியிருந்த காட்டு பகுதியில் வாழ்ந்த “மியோ” என்ற ஓர் இசுலாமிய சமுகம் கொலையிலும், கொள்ளையிலும் ஈடுபட்டனர். இதை பெரும் வலாக ஏற்றி தாமே முன்னின்று மியோகீகளை தேடிப்பிடித்தி கொன்றனர்.

  • ராஜபுத்திர அரண்களும் அழிக்கப்பட்டன.
    *சாலைகளை பாதுகாக்கவும், கலகங்களை கையாளவும் அப்பகுதி முழுவதும் ஆப்கான் படைவீரர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

  • தெய்வீக உரிமை கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்.

  • பைபோஸ் (சிவிடா என்ற தரையில் விழுந்தி வணங்கும் முறை) மன்னர் காலை முத்தமிடும் பாரசீக முறை அறிமுகம்.

  • நவ்ரோஸ் என்ற பாரசீக விழாவை ஆடம்பரமாக பால்பன் கொண்டாடினார்.

  • நாற்பதின்மர் என்ற அடிமை முறையை ஒழித்து ஒற்றர் படையைஅறிமுகம் செய்தனர்.

  • “திவானி அர்ஸ்” என்ற இராணுவத்துறையை ஏற்படுத்தினர்.

  • காடுகள் அழிக்கப்பட்ட புதிய நிலங்கள் புதிதாக படையில் சேர்ந்த ஆப்கானியர்க்கும், குத்தகையில்லா நிலங்களாக (மஃபீருகி) வழங்கப்பட்டு அவை பயிரிடப்பட்டன.

  • வணிகத் தடம், கிராம சந்தையை பாதிகாகே புதிய கோட்டைகள் கட்டப்பட்டன.

பால்பன் ஆதரித்த கவிஞர்கள்

இந்திய கிளி-அமிர்குஸ்கு, அமிர் ஹாசன் (1253-1325)

அமிர் குஸ்ரு பாரசீக கவிஞர் சுமார் 4,00,000 ஈரடிச் செய்யுள்கள் எழுதியுள்ளார்.

  • தில்லியை சுற்றியுள்ள பகுதிகளிலும், தோவாபிலும் நிகழ்ந்த பால்பன் தாக்குதல்கள் பற்றி பாரணி குறிப்பிடுகிறார்.
  • பால்பன் ஓர் அடிமையாக, நீர் சுமப்பவராக, வேட்டைக்காரனாக, தளபதியாக, ராஜதந்திரியாக, சுல்தானாக விளங்கிய பால்பன் மிக நீண்ட டில்லி மன்னர் பட்டியலில் குறிப்பிடத்தக்க நபராக விளங்கினார் என லேன்பூலால் போற்றப்பட்டார்.

மங்கோலியர்கள்

  • மங்கோல் என்ற பெயர் மங்கோலிய மொழி பேசக்கூடிய மத்திய ஆசிய. நாடோடிக் குழுக்களை குறிக்கும்.
  • 12-ம் நூற்றாண்டில் செங்கிஸ்கான் தலைமையில் பெரிய அரசாட்சியை நிறுவினார்.

அரசாட்சி பகுதிகள்

  • ரஷ்யாவின் பெரும்பகுதி, சீனா, கொரியா, தென் கிழக்கு ஆசியா, பாரசீகம், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஐரோப்பா ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • விரைவான குதிரைகளும், சிறந்த குதிரைப்படை உத்திகளும், புதிய தொழில் நுட்பத்தை ஏற்கும் மனப்பான்மையும், அரசியலை சூழ்ச்சி திறனுடன் கையாளும் செங்கிஸ் கானின் திறமை மங்கோலிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
  • முகமதி-வின் மகன் கைதிஸ்சி.
  • புக்ரா கானின் மகன் கைகுபாத் (பால்பனின் வாரிசு மகனாக வளர்க்கப்பட்டார்)