காயிதே-மில்லத்

  • கண்ணியமிகு என்னும் அடைமொழியால் குறிப்பிடப்படுபவர் காயிதே மில்லத்

  • இயற்பெயர் - முகம்மது இசுமாயில்

  • காயிதே மில்லத் என்னும் சொல்லுக்கு சமுதாய வழிகாட்டி என்பது பொருள்.

  • “மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்” என்று வெளிப்படையாக அறிவித்தவர்

  • “பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டுமென்றால், அது தமிழ்மொழிதான் என்று நான் உறுதியாகச் சொல்வேன். இன்னமும் விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால் திராவிட மொழிகள் தாம் இந்த முதன்முதலாகப் பேசப்பட்ட மொழிகள். அவற்றுள் மிகவும் இலக்கியச் செறிவு கொண்ட தமிழ்மொழிதான் மிகப் பழமையான மொழி. எனவே, தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்” என்று கூறியவர் - காயிதே மில்லத்.

  • திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி,கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்றை தொடங்க காரணமாக இருந்தவர் - காயிதே மில்லத்

  • “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்” என்று புகழ்ந்து கூறியவர் அறிஞர் அண்ணா

  • “இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது.அவர் நல்ல உத்தமமான மனிதர்” காயிதே மில்லைத்தைப் பற்றி புகழ்ந்து கூறியவர் தந்தை பெரியார்

  • காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்கு சமுதாய வழிகாட்டி என்பது பொருள்.

  • விடுதலைப் போராட்டத்தின் போது காயிதே மில்லத் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.

  • காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் - நாடாளுமன்றம்.