- அறம், பொருள், இன்பம், வீடு என நான்கையும் கொண்டது [[ஐம்பெருங்காப்பியம்]] ஆகும். ஒன்றிரண்டு குறைவது [[ஐஞ்சிறுங் காப்பியங்கள்]].
- இது தொடர் நிகழ்ச்சிகளைக் கொண்டு கதைப் போக்கில் அமைவதால் தொடர்நிலைச் செய்யுள் என அழைக்கப்படுகிறது.
- காப்பிய இலக்கணம் நூல் [[தண்டியலங்காரம்]] ஆகும்.
- காப்பியம் என்பது காப்பை இயம்புவது என்ற தமிழ்ச் சொல் ஆகும்.
- காவியம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு என்றும் கூறுவர்.
[[ஐம்பெரும் காப்பியங்கள்]]
[[மயிலை நாதர்]]
ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு
==“சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான் திளையாத குண்டலகே சிக்கும்”==
-[[திருத்தணிகையுலா]].
ஐம்பெருங்காப்பியங்களின் நூற்பெயர்களை முதன்முதலில் குறிப்பிட்டவர் - கந்தப்பதேசிகர்
| நூல் | ஆசிரியர் | மதம் |
|---|---|---|
| [[சிலப்பதிகாரம்]] | இளங்கோ | சமணம் |
| [[மணிமேகலை]] | சாத்தனார் | பௌத்தம் |
| [[சீவக சிந்தாமணி]] | திருத்தக்க | சமணம் |
| [[வளையாபதி]] | தெரியவில்லை | சமணம் |
| [[குண்டலகேசி]] | நாதகுத்தனார் | பௌத்தம் |
[[ஐஞ்சிறுங் காப்பியங்கள்]] - சமணம்
சி.வை. தாமோதனார்
| நூல் | ஆசிரியர் | நூல் அமைப்பு | மூல நூல் |
|---|---|---|---|
| [[சூளாமணி]] | தோலமொழித்தேவர் | 2320 பாடல்கள், 12 சருக்கங்கள் | ஸ்ரீபுராணம் |
| [[நீலகேசி]] | தெரியவில்லை | 894 பாடல்கள், 10 சருக்கங்கள் | |
| [[யசோதர காவியம்]] | வெண்ணாவலூர் உடையார் | 320 பாடல்கள், 5 சருக்கங்கள் | உத்திர புராணம் |
| [[உதயன குமார காவியம்]] | தெரியவில்லை | 369 பாடல்கள், 6 காண்டங்கள் | பெருங் கதை |
| [[நாககுமார காவியம்]] | தெரியவில்லை | 170 பாடல்கள் 5 சருக்கங்கள் |
- சமண காப்பியங்கள்
- விருத்தப்பாக்கள்
பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்களும் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டவையே.