கவிமணி தேசிக விநாயகம்

நூல்கள்:

“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி நாவால் நக்குது வெள்ளைப்பசு - பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி”

கவிமணி

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே - கா‌.நமச்சிவாயர்

பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே! நீயும் பாரில் வர அஞ்சினையோ? வெண்ணிலாவே!

நன்மை செய்பவரே - உலகம் நாடும் மேற்குலத்தார் ! தின்மை செய்பவரே- அண்டித் தீண்ட ஒண்ணாதார்

ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் - ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? தீயவும் நல்லவும் செய்தவரை விட்டுச் செல்வது ஒருநாளும் இல்லை ஐயா

ராமாயணக் கதையினை தமிழகத்துச் சிறுவர் சிறுமியர் விரும்பிப் படிக்கும் வண்ணம் இனிய எளிய நடையில் ஒரு தொடர்நிலைச் செய்யுளாகப் பாடுமாறு நான் தமிழ்க் கவிஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன்

தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை தேரும் சிலப்பதி காறமதை ஊனிலே எம்முயிர் உல்லலவும் - நிதம் ஓதி யுணர்ந்தின் திருவோமே”

கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங் காடும் செடியும் கடந்துவந்தேன்;எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல் ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.

==மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா…==.

*உடலின் உறுதி உடையவரேஉலகில் இன்பம் உடையவராம்;இடமும் பொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமோ?சுத்தம் உள்ள இடமெங்கும்சுகமும் உண்டு நீயதனைநித்தம் நித்தம் பேணுவையேல்நீண்ட ஆயுள் பெறுவாயே!காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின்காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே! *

மலரும் மாலையும்