கி.பி.(பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்ககாலம் படிப்படியாகத் தனது சரிவைச் சந்தித்தது.
களப்பிரர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி இரண்டரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர்.
அவர்கள் விட்டுச்சென்ற நினைவுச் சின்னங்கள், தொல்கலைப் பொருட்கள் என எதுவுமில்லை. ஆனால் அவர்களின் ஆட்சி குறித்து இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.
இலக்கியச் சான்றுகள், தமிழ் நாவலர் சரிதை, [[யாப்பெருங்கலம்]], [[பெரிய புராணம்]] ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
[[சீவக சிந்தாமணி]], [[குண்டலகேசி]] ஆகிய இரண்டும் இக்காலத்தில் எழுதப்பட்டவைகளாகும்.
தமிழகத்தில் பௌத்தமும், சமணமும் முக்கியத்துவம் பெற்ற காலம் அது.
சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளில் அறிமுகத்தால் வட்டெழுத்து என்னும் புதிய எழுத்துமுறை உருவானது.
[[பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்]] சேர்ந்த பல நூல்கள் இயற்றப்பட்டன. இக்காலத்தில் வணிகமும், வர்த்தகமும் தொடர்ந்து செழித்தோங்கின. எனவே களப்பிரர் காலமானது பொதுவாகச் சித்திரிக்கப்பட்டதைப் போன்று இருண்ட காலம் அல்ல.