கலித்தொகை

==ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல் பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்*-== நல்லந்துவனார்

==பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்== (கலி.139)

ஏறு தழுவுதல்

==எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர்==

முல்லைக்கலி – 102: அடி 21-24

==நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய் துளங்கு இமில் நல்ஏற்றினம் பல களம்புகும்மள்ளர் வனப்பு ஒத்தன==

கலி - 106: அடி 7-10

==ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது==