கலிங்கத்துப்-பரணி

  • [[செயங்கொண்டார்]] தீபங்குடி
  • முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.
  • பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் புகழ்ந்துள்ளார்.
  • கலிங்கத்துப்பரணி தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல்.
  • தமிழில் முதல்முதலில் எழுந்த பரணி
  • இது [[முதலாம் குலோத்துங்க சோழன்]], அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது.
  • இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று [[ஒட்டக்கூத்தர்]] புகழ்ந்துள்ளார்.
  • 599 கலித்தாழிசையால் பாடப்பெற்றது

வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம். இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர். இருவர் ஒருவழி போகல் இன்றியே (2)

ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் உடலின் நிழலினை வெருவி அஞ்சினர் அருவர் வருவர் எனா இறைஞ்சினர். அபயம் அபயம் எனநடுங்கியே

“விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ணமேன்மேலும் முகமலரும் மேலோர் போல” - கலிங்கத்துப்பரணி, 477

கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார்

விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல