ஓரெழுத்து-ஒருமொழி

நெட்டெழுத்து ஏழே ஓர்எழுத்து ஒருமொழி

தொல்காப்பியம் | எழுத்து 2 : 43

குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே

எழுத்து 2 : 44

நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர்

  • உயிர் வரிசையில் - 6 எழுத்துகளும்
  • ம வரிசையில் 6 எழுத்துகளும்
  • த, ப, ந என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும்
  • க, ச, வ என்னும் வரிசைகளில் நான்கு நான்கு எழுத்துகளும்
  • ய வரிசையில் ஒன்றும்
  • நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார்;- நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.

‘மா’ - என்னும் ஒரு சொல் மரம், விலங்கு. பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு

எழுத்துசொல்
பசு
கொடு
இறைச்சி
அம்பு
தலைவன்
மதகுநீர் தாங்கும் பலகை
காசோலை
கூபூமி
கைஒழுக்கம்
கோஅரசன்
சாஇறந்துபோ
சீஇகழ்ச்சி
சேஉயர்வு
சோமதில்
தாகொடு
தீநெருப்பு
தூதூய்மை
தேகடவுள்
தைதைத்தல்
நாநாவு
நீமுன்னிலை ஒருமை
நேஅன்பு
நைஇழிவு
நோவறுமை
பாபாடல்
பூமலர்
பேமேகம்
பைஇளமை
போசெல்
மாமாமரம்
மீவான்
மூமூப்பு
மேஅன்பு
மைஅஞ்சனம்
மோமோத்தல்
யாஅகலம்
வாஅழைத்தல்
வீமலர்
வைபுல்
வெளகவர்
நொநோய்
துஉண்