ஒருமை பன்மை மரபுப் பிழைகள்
- ஒரு வாக்கியத்தில் எழுவாய் பன்மையில் இருக்கும் பொழுது பயனிலையும் பன்மையில் தான் இருக்க வேண்டும்.
- உயர்திணை எழுவாய், உயர்திணைப் பயனிலையைப் பெற்று வரும். அதேபோன்று அஃறிணை எழுவாய்க்குப்பின் அஃறிணை வினைமுற்றே வரவேண்டும்.
- எழுவாய் ஐம்பால்களுள் எதில் உள்ளதோ அதற்கேற்ற வினைமுற்றையே பயன்படுத்த வேண்டும்.
- கள் விகுதி பெற்ற எழுவாய், வினைமுற்றிலும் கள் விகுதிபெறும். அதே போன்று அர் விகுதி பெற்றிருந்தால் வினைமுற்றிலும் அர் விகுதிபெறும்.
- எழுவாய் ஒருமையாயின் வினைமுற்றும் ஒருமையாகவே வேண்டும்.
- கூறியது கூறல் ஒரே தொடரில் இடம் பெறக் கூடாது.
- வாக்கியத்தில் உயர்திணை, அஃறிணைப் பெயர்கள் கலந்துவந்தால், சிறப்புக் கருதின் உயர்திணைப் பயனிலைக் கொண்டும், இழிவு கருதின் அஃறிணைப் பயனிலை கொண்டும் வாக்கியத்தை முடிக்க வேண்டும்.