ஐங்குறுநூறு

தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை பற்றி
’கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை’ என்று கூறும் நூல் -ஐங்குறுநூறு

  • ஐங்குறுநூறு அகநூல் ஆகும்.

  • 500 பாடல்களைக் கொண்டது.

  • சிற்றெல்லை 3 அடி. பேரெல்லை 6 அடி.

  • ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல்கள்

  • ஒவ்வொரு திணையும் பத்துப்பத்தாக பிரிக்கப்பட்டுள்ளது.

  • ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.

  • ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

  • கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்

  • இந்நூலை முதன்முதலாகப் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதர்

திணையையும் பாடிய புலவர்கள்
• குறிஞ்சி - கபிலர்
• முல்லை - பேயனார்
• மருதம் - ஓரம்போகியார்
• நெய்தல் -அம்மூவனார்
• பாலை - ஓதலாந்தையார்