ஏறு தழுவுதல்

சிலம்பு முதலான இலக்கியங்களிலும் புறப்பொருள்வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்ப ட்ட எருதுபொருதார் கல் ஒன்று உள்ளது.

==கோவுரிச்சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடிப்பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு== என்பது அந்நடுகல் பொறிப்பு.

கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவதுபோன்ற பண்டைய ஓவியம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கரிக்கையூரில் காணப்படுகிறது.

திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர்அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரைமாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்துமேட்டுப்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் மயிலாடும் பாறை அருகே சித்திரக்கல் புடவு என்ற இடத்தில் திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டது.

சிந்துவெளி அகழாய்வுகளில் கிடைத்த மாடு தழுவும் கல் முத்திரை ஏறுதழுவுதலைக் குறிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார்.

ஏறு தழுவுதல்,

மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருது கட்டி, காளைவிரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு

சல்லி - மாட்டின் கழுத்தில் கட்டப்படும் வளையம்

புளியங்கொம்பினால் வளையம் செய்து கட்டப்படும் வழக்கம்

சல்லி நாணயங்களை, துணியில் முடிந்து கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம்

காளைச் சண்டை - ஸ்பெயின்