எழுத்திலக்கணம்

தமிழ் எழுத்துக்களின் எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு எனும் பன்னிரு பகுதிகளையும் விளங்கக் கூறுவது எழுத்து இலக்கணம் ஆகும்.

எழுத்துகளின் வகைகள்

முதல் எழுத்து, சார்பு எழுத்து என இருவகைப்படும்.

முதலெழுத்துகள்

  • உயிர் 12
    • குறில் 5 + நெடில் 7
  • மெய் 18
    • க்ச்ட்த்ப்ற் - வல்லினம்
    • ங்ஞ்ண்ந்ம்ன் - மெல்லினம்
    • ய்ர்ல்வ்ழ்ள் - இடையினம்

சார்பெழுத்து 10 வகைப்படும்

  1. உயிர்மெய்
  2. ஆய்தம் - அஃகேனம், முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, முற்றாய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலுகரம்
  6. குற்றியலிகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஔகாரகுறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆயுதக்குறுக்கம்

அளபெடை

அளபு - மாத்திரை

எடுத்தல் - எடை

செய்யுளில் ஓசை குறையும்போது, ஒரு சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் தமக்குரிய இரண்டு மாத்திரை கால அளவிலிருந்து நீண்டு ஒலிக்கும்.

அளபெடை 2 வகைப்படும்.

  1. உயிரெழுத்தைக் கொண்டு ஓசையை நிறைவு செய்தால் உயிரளபெடை
  2. மெய்யெழுத்தைக் கொண்டு ஓசையை நிறைவு செய்தால் ஒற்றளபெடை

உயிரளபெடை 3 வகைப்படும்

  1. செய்யுளிசை அளபெடை (அ) இசைநிறை அளபெடை

செய்யுளில் ஓசையை நிறைவு செய்யும் பொருட்டு அளபெடுத்தல்.

Eg

  • ஒஒதல் வேண்டும் - சொல்லின் முதலில்
  • தொழாஅர் - சொல்லின் இடையில்
  • உறாஅர்க் குறுநோய் - மொழியிடை
  • நடுவொரிஇ - சொல்லின் இறுதியில்
  • நல்ல படாஅ பறை - மொழியிறுதி
  1. இன்னிசை அளபெடை

இனிய ஓசை தரும் பொருட்டு அளபெடுத்தல்.

Eg

  • கெடுப்பதுஉம் எடுப்பதுாஉம்
  1. சொல்லிசை அளபெடை

பெயர் சொல்லை வினை சொல்லாக மாற்றும் பொருட்டு

Eg

  • தழீ என்பது தழுவுதல் எனப் பொருள்படும் பெயர்ச்சொல். அச்சொல் தழீஇ என அளபெடுத்ததால் தழுவி என வினையெச்சச் சொல்லாயிற்று
  • உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரனசைஇ இன்னும் உளேன்
  • நசை விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என அளபெடுத்தது. பெயர்ச்சொல், வினை எச்சமாக மாறியது.

ஒற்றளபெடை

ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், ஃ ஆகிய பதினோரு எழுத்துக்களும் ஒரு குறிலை அடுத்தும் இரு குறில்களை அடுத்தும் செய்யுளில் இனிய ஓசை வேண்டி அளபெடுக்கும்

Eg

  • எங்ங் கிறைவன்
  • எஃஃகிலங்கிய கையராய் இன்னுயிர்