இல்துமிஷ்

  • “இல்பாரி” மரபைச் சேர்ந்தவர்
  • அபெர்லாய் துருக்கியர், மத்திய ஆசியா
  • அடிமையின் அடிமை. (சிறுவயதிலே ஐபெக்கிடம் அடிமையாக விற்கப்பட்டவர்)
  • ஐபெக்-ன் மகுமகன்.
  • தலைநகரை லாகூரிலிருந்தி டெல்லிக்கு மாற்றினார்.

படையெடுப்புகள்

  • 1215-ல் கோரி-யின் அரசர் எல்டோஸ்.
  • 1217-ல் சிந்தி அரசர் நஸ்ருதீன் வோஜா
  • ஜலோர் பகுதியின் மன்னர் உதய்சிங்
  • வங்காள பகுதியின் மன்னர் இவாஸ் கொல்லப்பட்டு வங்காள ஆளுநர் அலிவர்தனின் சதியை முறியடித்தார்.
  • முல்தான் அரசர் நசுருதீன் குபாச்சாவை கொன்ற அவர் தங்கிய பக்கார் பகுதியை கைப்பற்றினார்.
  • குவாலியர், ரன்தம்பூர், அஜ்மீர் அரசுகளை முடிவுக்கு கொண்டு வந்தார்.

மங்கோலிய படையெடுப்பு

  • கி.பி 1221-ல் மங்கோலியர்கள் செங்கிஸ்கான் தலைமையில் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர் ஆனால் தாக்கவில்லை.
  • ஏனெனில் கவாரிசம் பகுதியின் மன்னர் ஜலாலுதீன் மங்கர்பணியை செங்கிஸ்கான் தோற்கடித்தபோது அவர் சிந்து நதியை கடந்து இந்தியாவில் நுழைந்து இல்துமிஷிடம் அடைக்கலம் கோரும்போது அவர் மறுத்ததால் மனம் மகிழ்ந்த செங்கிஸ்கான் இந்தியா மீது படையெடுக்காமல் பாரசீகத்தின் மீது படையெடுத்தார்.
  • கங்கை, யமுனை (தோ ஆப்) பகுதிகள் இல்திமிஷ் பேரரசுடன் இணைக்கப்பட்டது.
  • 1230-ல் வங்காளத்தில் ஏற்பட்ட கில்ஜி மாலிக்குகளின் கலகத்தை அடக்கினார்.

நாணயம்

  • ஜிடால் - செம்பு நாணயம்
  • 1 ஜிடால் - 3.6 வெள்ளி குன்றிமணிகள்.
  • 48 விடால் = 1 வெள்ளி டாங்கா
  • 175 மி.கி கொண்ட டாங்கா வெள்ளி நாணயம் அராபிய மொழியில் வெளியிட்டார்.

நிர்வாகம்

  • இல்துமிஷ்-ன் மேல்தட்டு அடிமைகள் பலரும் துருக்கிய, மங்கோலிய வழித்தோன்றல்கள்
  • அவர்களை பக்காரா, சாமர்கண்ட், பாக்தாத் போன்ற வணிக மையத்திலிருந்து வணிகர்கள் தில்லிக்கு அழைத்து வந்தனர்.
  • இந்த அடிமைகள் அனைவருக்கும் துருக்கிய பட்டங்களை வடிங்கினார்.
  • தனது மேல்தட்டு இராணுவ அடிமைகளையே (பண்டகன்) நம்பியிருந்தார்.
  • அவர்களையே ஆளுநர், தளபதிகளாகவும் நியமித்தார்.
  • மங்கோலிய தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக துருக்கிய பிரபுக்கள் 40 பேரைக் கொண்ட குழு *சகல்கானி”(அ) “நாற்பதின்மர்” எனப்பட்டது.
  • இல்துமிஷ் தனது படைகளில் பணியாற்றிய இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காக கொடுக்கப்பட்ட நிலங்களே இக்தாக்கள் (நிலங்கள்) ஆகும்.
  • நிலத்தை பெற்றவர் இக்தாதார் (அ) முக்தி எனப்பட்டார்.
  • அஜ்மீரில் அழகிய மசூதியை கட்டினார்.
  • ஆதரித்த அறிஞர்கள்: மின்ஹஜ்-உஸ்-சிராஜ், தாஜிதின், நிஷாம் உல்முல்க் முகமதி, ஜெயனசி, மாலிக் குத்புதின் ஹசன், பக்ருல் முல்க்
  • பாம்யான்கள் மீதி போர் தொடுக்க 29 ஏப்ரல் 1236-ல் ஏறீபாடு செய்தி கொண்டிருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.
  • இல்துமிஷ் இறப்பிற்கு முன் தன் மகள் ரசியாவை சுல்தானாக அறிவித்தார்.
  • அராபிய மொழியில் நாணயங்களை வெளியிட்ட முதல் துருக்கியர் -இல்திமிஷ்
  • டெல்லி சுல்தானியத்தில் “பரம்பரை வாரிசு முறை”மை தொடங்கி வைத்தவர் - இல்திமிஷ்