இலக்கணம்

வினையாலணையும் பெயர்

  • கேள்வியினான்

வினைத்தொகை

  • உறுதுயர்
  • கொல்களிறு
  • வளர்வானம்
  • காய்மணி
  • உய்முறை
  • செய்முறை

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

  • வாரா (ஒன்றன்)

வேற்றுமைத்தொகை

  • மெய்முறை
  • மதுரை சென்றார்
  • கைதொழுது - 3ம் வேற்றுமைத் தொகை

உருபும் பயனும் உடன்தொக்க தொகை

  • தேர்ப்பாகன்
  • கைமுறை -மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை

பண்புத்தொகை

  • வட்டத்தொட்டி
  • இன்மொழி
  • மார்கழித் திங்கள் - இருபெயரொட்டு பண்புத்தொகை
  • சாரைப்பாம்பு - இருபெயரொட்டு பண்புத்தொகை

உவமைத்தொகை

  • மலர்க்கை (மலர் போன்ற கை) -

அன்மொழித்தொகை

  • சிவப்புச் சட்டை பேசினார்
  • முறுக்கு மீசை வந்தார்

காக்கென்று - காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்

கணீர் - கண்ணீர் என்பதன் இடைக்குறை

ஏந்தி - வினையெச்சம்

காலமும் - முற்றும்மை

வெந்து, வெம்பி, எய்தி – வினையெச்சங்கள்

மூடுபனி – வினைத்தொகை,

ஆடுங்கிளை – பெயரெச்சத் தொடர்

கருங்குவளை, செந்நெல் – பண்புத் தொகைகள்.

விரிமலர் – வினைத்தொகை

தடவரை – உரிச்சொல் தொடர்

மூதூர், நல்லிசை, புன்புலம் பண்புத்தொகைகள்; நிறுத்தல் தொழிற்பெயர் ; அமையா ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
நீரும் நிலமும், உடம்பும் உயிரும் எண்ணும்மைகள்; அடுபோர் வினைத்தொகை.
கொடுத்தோர் பெயர். வினையாலணையும்

தோரணவீதியும், தோமறு கோட்டியும் -எண்ணும்மைகள்

காய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத்தாமம் - இரண்டாம் வேற்றுமைஉருபும்பயனும் உடன்தொக்கத் தொகைகள்

மாற்றுமின், பரப்புமின் - ஏவல் வினைமுற்றுகள்

உறுபொருள் - உரிச்சொல்தொடர்

தாழ்பூந்துறை - வினைத்தொகை

பாங்கறிந்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை

நன்பொருள் , தண்மணல், நல்லுரை - பண்புத்தொகைகள்

பண்பும் அன்பும், இனமும் மொழியும் - எண்ணும்மைகள்.

சொன்னோர் - வினையாலணையும் பெயர்.

மாக்கடல் - உரிச்சொல்தொடர்;

ஆக்கல் – தொழில்பெயர்;

பொன்னேபோல் – உ வ ம உ ரு பு ;

மலர்க்கை – உவமைத்தொகை;

வில்வாள் – உம்மைத்தொகை;

தவிர்க்கஒணா - ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்.

அறிவார், வல்லார்- வினையாலணையும் பெயர்கள்

விதையாமை, உரையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்கள்

தாவா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பைங்கிளி - பண்புத்தொகை;

பூவையும் குயில்களும், முதிரையும், சாமையும், வரகும்- எண்ணும்மைகள்.

இன்னிளங்குருளை பண்புத்தொகை ;

அதிர்குரல் வினைத்தொகை;

மன்னிய- பெயரெச்சம்;

வெரீஇ- சொல்லிசை அளபெடை;

கடிகமழ் உரிச்சொற்றொடர்;

மலர்க்கண்ணி- மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை;

எருத்துக்கோடு- ஆறாம் வேற்றுமைத்தொகை;

கரைபொரு- இரண்டாம் வேற்றுமைத் தொகை;

மரைமுகம்- உவமைத்தொகை;

கருமுகில்- பண்புத்தொகை;

வருமலை- வினைத்தொகை;

முத்துடைத்தாமம் - இரண்டாம் வேற்றுமைத் தொகை

வெண்குடை, இளங்கமுகு – பண்புத் தொகைகள்

கொல்யானை , குவி மொட்டு – வினைத்தொகைகள்.

வெரீஇ – சொல்லிசையளபெடை

ஓங்கிய – பெயரெச்சம்;

நிலைஇய – சொல்லிசை அளபெடை;

குழாஅத்து – செய்யுளிசை அளபெடை;

வாயில் – இலக்கணப் போலி.

மாகால் – உரிச்சொல் தொடர்;

முழங்கிசை, இமிழிசை – வினைத்தொகைகள்.

நெடுநிலை, முந்நீர் – பண்புத் தொகைகள்;

மகிழ்ந்தோர் – வினையாலணையும் பெயர்

பிறவிஇருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர்- உருவகங்கள்.

உருண்டது, போனது - ஒன்றன் பால் வினைமுற்றுகள்

சரிந்து – வினையெச்சம் அனைவரும் – முற்றும்மை.

வினைமுற்று

  • செயல் முற்றுப் பெற்ற நிலையையும், காலத்தையும் காட்டுவது.
  • தன்மை வினைமுற்று, பேசுபவனுடைய செயலைக் குறிக்கும்.
  • காலம் காட்டும், ஒருமை பன்மை உணர்த்தும், பால் உணர்த்தாது.
  • விகுதிகள் -

Eg : வந்தான், பாடுகிறாள், பேசுவார்

எச்சம்: பெயரெச்சம் & வினையெச்சம்

  • செயல் முற்றுபெறாமல் எஞ்சி நிற்பது எச்சம். அவ்வெச்சம் பெயரை கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம், வினையை கொண்டு முடியுமானால் அது வினையெச்சம்.

தொழிற்பெயர் :

  1. முதனிலை தொழிற்பெயர்

  2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்

  3. வினையாலணையும் பெயர்

  4. முதனிலை தொழிற்பெயர்

தொழிற்பெயர் விகுதிகள் அல்லாமல் பகுதி மட்டும் வந்து தொழிலை உணர்த்துவது.

  • எனக்கு அடி விழுந்தது
  1. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
  • அவனுக்கு என்ன **கேடு

    **( கெடு - பகுதி/முதனிலை)

  1. வினையாலணையும் பெயர்
  • வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.
  • மூவிடங்களிலும் வரும், முக்காலத்தையும் காட்டும்.

Eg. அடித்தவன் , கொண்டவன்

சொல் இலக்கணம்

சொல்லின் இரண்டு பிரிவுகள்

  • இலக்கண வகைச் சொற்கள்
  • இலக்கிய வகைச் சொற்கள்

இலக்கண வகைச் சொற்கள்

  • பெயர்ச்சொல்

    1. பெருட்பெயர்
    2. இடப்பெயர்
    3. காலப் பெயர்
    4. சினைப்பெயர்
    5. பண்புப்பெயர்
    • தொழிற்பெயர்
      1. முதனிலை தொழிற்பெயர்
      2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
      3. வினையாலணையும் பெயர்
  • வினைச் சொல்

    வினையை குறிக்கும் சொல்

  • இடைச்சொல்

  • உரிச்சொல்

    • ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்

      சால, உறு, தவ, நனி, கூர், கழி - மிகுதிப் பொருளை உணர்த்தும்

    • பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்

      “கடி” - விரைவு, மணம், காவல், கூர்மை, அச்சம், புதுமை

இலக்கிய வகைச் சொற்கள்

  1. இயற்சொல்(சோறு, கிளி - போன்ற யாவர்க்கும் புரிவன)
  2. திரிசொல்(சொன்றி- கிள்ளை- போன்ற கற்றவர்க்கே புரிவன)
  3. திசைச் சொல்(அல்வா, சன்னல் - போன்ற பிறமொழிச் சொற்கள்)
  4. வடசொல்(பாவம், புண்ணியம், குங்குமம் போன்ற வடமொழிச் சொற்கள்)

இலக்கண வகையான நால்வகைச் சொற்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டு :

ஆலயம் தொழுவது சாலவும் நன்று - ஒளவையார்

இச்செய்யுளில் நான்குவகைச் சொற்களும் உள்ளன.
ஆலயம் - பெயர்ச்சொல்
தொழு - வினைச்சொல்
சால - உரிச்சொல்
உம் - இடைச்சொல்

பெயர்ச்சொல்

பெயரை குறிக்கும் சொல் பெயர்ச்சொல். இது 6 வகைப்படும்.

  1. பெருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. காலப் பெயர்
  4. சினைப்பெயர்
  5. பண்புப்பெயர்
  • தொழிற்பெயர்
    1. முதனிலை தொழிற்பெயர்
    2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
    3. வினையாலணையும் பெயர்