தமிழ் இலக்கணம்
-
எழுத்திலக்கணம்
-
பொருளிலக்கணம்
[[யாப்பிலக்கணம்]]
- அணியிலக்கணம்
[[எழுத்திலக்கணம்]]
[[சொல்லிலக்கணம்]]
தொகைநிலைத் தொடர்
ஆறு வகைப்படும்.
- வேற்றுமைத்தொகை
- வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) மறைந்து வந்து பொருள் உணர்த்துவது
- வினைத்தொகை
- காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது “வினைத்தொகை” எனப்படும்.
- காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும்.
- பண்புத்தொகை
- நிறம், வடிவம், சுவை, முதலானவற்றை அளவு உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் “மை” என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
- உவமைத் தொகை
- உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
- உம்மைத்தொகை
- இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும். உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.
- அன்மொழித்தொகை
- வேற்றுமை, வினை, பண்பு, உவமை,
உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களில் உருபுகளும் அவை அல்லாத வேறு சொற்களும்
மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை எனப்படும்.
எ.கா. சிவப்புச் சட்டை பேசினார்
உருபும் பயனும் உடன்தொக்க தொகை
-
எ.கா. தேர்ப்பாகன்
இத்தொடர் “தேரை ஓட்டும் பாகன்” என விரிந்து பொருளை உணர்த்துகிறது. கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கிடையில் “ஐ” என்னும் வேற்றுமை உருபும் “ஓட்டும்” என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன. -
இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.
-
தமிழ்த்தொண்டு (தமிழுக்குச் செய்யும் தொண்டு) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ’ஆகிய ’ என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.
- மார்கழித் திங்கள் , சாரைப்பாம்பு.
- திங்கள் , பாம்பு ஆகிய பொதுப் பெயர்களுக்குமுன் மார்கழி, சாரை எனும் சிறப்புப் பெயர்கள் வந்து மார்கழி ஆகிய திங்கள் என்றும் சாரை ஆகிய பாம்பு என்றும் இருபெயரொட்டாக வந்துள்ளன.
தொகாநிலைத் தொடர்
ஒன்பது வகைகள்
- எழுவாய்த்தொடர்
- விளித்தொடர்
- வினைமுற்றுத்தொடர்
- பெயரெச்சத்தொடர்
- வினையெச்சத்தொடர்
- வேற்றுமைத்தொடர்
- இடைச்சொல் தொ டர்
- இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.
- மற்றொன்று - மற்று + ஒன்று. “மற்று” என்னும் இடைச்சொல்லை அடுத்து “ஒன்று” என்னும் சொல் நின்று பொருள் தருகிறது
- உரிச்சொல் தொடர்
- அடுக்குத் தொடர்
வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.
எ.கா.
கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி
வினா ஆறுவகைப்படும்
சுட்டு மறைநேர் ஏவல் வினாதல் உற்ற(து) உரைத்தல் உறுவது கூறல் இனமொழி எனும்எண் இறையுள் இறுதி நிலவிய ஐந்தும்அப் பொருண்மையின் நேர்ப’
என்று கூறும் நூல் - நன்னூல்.
செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் ‘பொருள்கோள்’ என்று பெயர். பொருள்கோள் எட்டு வகைப்படும்.
- ஆற்றுநீர்ப் பொருள்கோள்
- மொழிமாற்றுப் பொருள்கோள்
- நிரல்நிறைப் பொருள்கோள்
- விற்பூட்டுப் பொருள்கோள்
- தாப்பிசைப் பொருள்கோள்
- அளைமறிப்பாப்புப் பொருள்கோள்
- கொண்டு கூட்டுப் பொருள்கோள்
- அடிமறிமாற்றுப் பொருள்கோள்
ஆற்றுநீர்ப்பொருள்கோள்:
பாடலின் தொடக்கம் முதல் முடிவுவரை ஆற்றுநீரின் போக்கைப்போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால் அது ‘ஆற்றுநீர்ப்பொருள்கோள்’ ஆகும்.
(எ.கா)
“சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே’
என்ற பாடல் இடம் பெற்ற நூல் - சீவகசிந்தாமணி
‘மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள் அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப் புனலே’ என்று
ஆற்றுநீர்ப் பொருள்கோளைப் பற்றிக் கூறும் நூல் - நன்னூல்.
நிரல்நிறைப் பொருள்கோள்:
ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரியையாக) அமைந்து வருவது ‘நிரல்நிறைப்பொருள்கோள்’ ஆகும்.
இது ‘முறை நிரல்நிறைப் பொருள்கோள்’, ‘எதிர்நிரல் நிறைப் பொருள்கோள்’ என இருவகைப்படும்.
முறை நிரல்நிறைப் பொருள்கோள்:
செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்வது ‘முறை பொருள்கோள்’ ஆகும். நிரல்நிறைப்
(எ.கா) ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’
எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்:
செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்’ ஆகும்.
(எ.கா)
‘விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்’
கொண்டு கூட்டுப் பொருள்கோள்:
ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோளாகும்.
(எ.கா)
‘ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு’
மயிலை நாதர் உரை
‘யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே’
நன்னூல்
‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி மொழிபெயர்ப்பு இருந்தது.
‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை’
என்ற நீதி வெண்பா பாடலடிகளில் குறிப்பிடப்படுவது - கல்வி
‘அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்; பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே.‘
என்ற கவிதையை எழுதியவர் - பாரதிதாசன்