இராஇளங்குமரனார்

  • சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்.
  • திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் அமைத்திருப்பவர்.
  • விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர். அதற்காக தமிழ்த்தென்றல் [[திரு.வி.க|திரு.வி.க]] போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டார்

நூல்கள்

  • இலக்கண வரலாறு
  • தமிழிசை இயக்கம்
  • தனித்தமிழ் இயக்கம்
  • பாவாணர் வரலாறு
  • குண்டலகேசி உரை
  • யாப்பருங்கலம் உரை
  • புறத்திரட்டு உரை
  • திருக்குறள் தமிழ் மரபுரை
  • காக்கைப் பாடினிய உரை
  • தேவநேயம்

பாடப் பகுதி

தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்

  • தமிழில் சொல் என்பதற்கு நெல் என்பது ஒரு பொருள்.
  • சொன்றி, சோறு என்பவை அவ்வழியில் வந்தவை.
  • நெல்லில் பதர் உண்டு. ஆனால் சொல்லில் பதர் இருத்தலாகாது. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பியர் கூற்று.
  • மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள்.
  • மொழியை (சொல்லை) ஓரெழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி என மூன்றுவகையாக்குவர்.
  • ஓர் எழுத்து மொழி எவை எனின், நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி என்பார் தொல்காப்பியர்.
  • குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல் ஆவது இல்லை என்பதைக் குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே என்பார்.
  • நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி என்றால்
  • உயிர்நெட்டெழுத்துகள் ஏழுமா?
  • உயிர்மெய் நெட்டெழுத்துகள் 126 உண்டே!
  • தமிழில் சொல்லின் முதலில் வரும் எழுத்து, இடையில் வரும் எழுத்து, இறுதியில் வரும் எழுத்து, ஒன்றையொன்று அடுத்து வரும் எழுத்து என வரம்பு உண்டு. அதன்படி எல்லா எழுத்துகளும் எல்லா நிலைகளிலும் வாரா.
  • நெட்டெழுத்துகளில் சொல் என்னும் நிலையைப் பெறாதவையும் உண்டு.
  • பூ என்பது ஓரெழுத்து ஒரு மொழி. கா என்பதும் ஓரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்துப் பூங்கா எனக் கலைச்சொல் ஆக்கி வைத்துள்ளனர்.
  • யா என்பது வினா. யாது, யாவர், யாவன், யாவள், யாங்கு, யாண்டு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் வந்து நிற்கும் எழுத்து ‘யா’ தானே!
  • ஆ, மா, நீ, மீ, பீ, ஊ, சே, தே இவ்வாறான ஓரெழுத்து ஒரு மொழிகளும்உள்ளன. பூங்கா இணைந்தது போல ஆ, மா என்பவை இணைந்து ஆமா என்னும் கலைச்சொல் வடிவம் கொண்டமை பண்டைக் காலத்திலேயே உண்டு.
  • காட்டுப் பசுவுக்கு ‘ஆமா’ என்று பெயர்.மா என்பதும் ஓரெழுத்து ஒரு மொழிகளுள் ஒன்று.
  • மா என்பது விலங்கையும் குறிக்கும். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நிற்கின்றது.
  • ஈ என்னும் பொதுப் பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கிறது.
  • மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்து வழங்கும் வழக்கம் உள்ளது.
  • ஈ என்பது ஈக என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை.
  • ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறுவதும் உண்டு.
  • போ, வா, நீ, சூ, சே, சை, சோ என்பவை எல்லாம் இக்காலத்தில் அ னை வ ரு ம் வழங்கும் சொற்களே.
  • நன்னூலார் கூறிய சில ஓரெழுத்து ஒரு மொழிகள் இன்று வழக்கில் இல்லாதவை என்றும், வழக்கிலுள்ள சில ஓரெழுத்து ஒரு மொழிகள் நன்னூலார் கூறிய பட்டியலில் இல்லாதவை என்றும் தெளிவு ஏற்படும்.
  • இன்னொரு வகையாகவும் பார்க்கலாம்.
  • ஆன் என்பது ஆ ஆகியது;
  • மான் என்பது மா ஆகியது;
  • கோன் என்பது கோ ஆகியது;
  • தேன் என்பது தே ஆகியது;
  • பேய் என்பது பே ஆகியது
  • எட்டத்தில் போகிற ஒருவனை ஏய் என அழைத்தனர். ஏய் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏய் என்பது ஏ என வழக்கில் ஊன்றிவிட்டது.
  • அம்பை ஏவு என்பர். ஏவுதல் என்பது ‘அம்பு விடுதல்’. ஏவும் அம்பு ‘ஏ’ என்றாகியது.
  • அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ஏவலன் எனப்பட்டான்.
  • அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ்; அதில் வல்லவனை ஏகலைவன் என்று பாராட்டியது.
  • ஏவு என்னும் சொல் ‘ஏ’ என்று ஆனது மட்டுமன்றி ‘எய்’ எனவும் ஆயிற்று.
  • ஏவுகின்றஅம்பைப் போல் கூர் முள்ளை உடைய முள்ளம்பன்றியின் பழம்பெயர் எய்ப்பன்றி.
  • அம்பை எய்பவர் எயினர். அவர்தம் மகளிர் எயினியர்.
  • சங்கப்புலவர்களுள் எயினனாரும் உளர். எயினியாரும் உளர்.