இனியவை-நாற்பது

  • ஆசிரியர் - [[பூதஞ்சேந்தனார்]]
  • மதுரை தமிழாசிரியர் மகனார்.
  • கிபி 5-ஆம் நூற்றாண்டு‌.

நூல்

  • கடவுள் வாழ்த்தையும் சேர்த்து 41 பாடல்கள் உள்ளன.
  • ஒவ்வொரு பாடலிலும் 3 (அ) 4 அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
  • முதல் வரியின் நான்காம் சீர், இரண்டாம் வரியின் நான்காம் சீர், மூன்றாம் வரியின் மூன்றாம் சீர் இன்னா எனவும், மூன்றாம் வரியின் நான்காம் சீர் ஆங்கு இன்னா என முடியும்.

சிறப்புகள்

  • இனியவை நாற்பதில் கடவுள் வாழ்த்து பாடலில் திருமால், சிவன், நான்முகன் ஆகிய மும்மூர்த்திகளையும் வணங்குதல் இனிது என்று போற்றப்படுவதால் இவர் வைணவம், சைவம் பாகுபாடு போற்றாதவர்.
  • மொத்தம் 124 இனிய செயல்கள் இதில் கூறப்பட்டுள்ளன
  • இனியவை நாற்பது நூல் பெண்ணடிமை பற்றி கூறுகிறது
  • பெண்ணை இழிவுபடுத்தல் நஞ்சு எனக் கூறும் நூல்.
  • இந்நூல் பொருளமைப்பில் [[திரிகடுகம்]] மை ஒத்துள்ளது.

மேற்கோள்:

  • குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
  • கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
  • சலவரைச் சாரா விடுதல் இனிதே
  • புலவர் தம்வாய்மொழி போற்றுதல்இனிதே
  • கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே
  • பிச்சை புக்காயினும் கற்றல் மிக வினிதே
  • நாட்டார்க்கு நல்ல செயல் இனிதே
  • குழவி தளர்நடைக் கண்டல் இனிதே அவர் மழலைக் கேட்டல் அமிழ்தின் இனிதே
  • தடமென் பனைத்தோள் தளிர் இயலாரைஇனிது விட மென்று உணர்தல்.