இடைக்கால-இந்திய-ஆதாரங்கள்

  • கி.பி 700 - 1200 தொடக்ககால இந்தியா

  • கி.பி 1200 - 1700 இடைக்கால இந்தியா

  • முதலாம் ராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேடுகளும்

  • சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடுகளும் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகும்.

  • காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் எனும் ஊரிலுள்ள கல்வெட்டுகள், கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்கின்றன.

  • இடைக்காலத்தைச் சேர்ந்த கஜுராகோ (மத்தியப் பிரதேசம்) எனுமிடத்திலுள்ள கோவில்கள், ராஜஸ்தான் மாநிலம், தில்வாரா (அபு குன்று) எனுமிடத்திலுள்ள கோவில்கள் கோனார்க்கில் (ஒடிசா) உள்ள கோவில்கள்

  • தஞ்சாவூரிலுள்ள பெரிய கோவில் (பிரகதீஸ்வரர் கோவில்), கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம்

  • ஹம்பியிலுள்ள வித்தாலா, விருப்பாக்சா கோவில்கள் விஜயநகர அரசர்களின் (15ஆம் நூற்றாண்டு) பங்களிப்பு

  • குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி, மோத்-கி-மசூதி, ஜமா மசூதி, பதேப்பூர் சிக்ரி தர்கா (இவையனைத்தும் டெல்லியிலும் அதற்கருகாமையிலும் அமைந்துள்ளன), சார்மினார் (ஹைதராபாத்) ஆகியன இடைக்காலத்தைச் சேர்ந்த முக்கிய மசூதிகளாகும்.

  • ஆக்ரா கோட்டை, சித்தூர் கோட்டை, குவாலியர் கோட்டை, டெல்லி செங்கோட்டை மேலும் தௌலதாபாத் (ஔரங்காபாத்), பிரோஷ் ஷா கொத்தளம் (டெல்லி)

  • ஜெய்பூர், ஜெய்சால்மர், ஜோத்பூர் ஆகிய இடங்களிலுள்ள அரண்மனைகள், ராஜபுத்திரர்களின் மேன்மைக்கான அடையாளங்களாகும்.

  • குதுப்மினார், அலெய்-தர்வாஷா மற்றும் இல்துமிஷ், பால்பன் ஆகியோரின் கல்லறைகள்

  • வடஇந்தியாவிலுள்ள பாழடைந்த நகரங்களான பிரோஷாபாத், துக்ளகாபாத் ஆகியனவும் தென்னிந்தியாவிலுள்ள ஹம்பியும் இடைக்கால இந்திய வரலாற்றுக்கான சான்றுக் கருவூலங்களாகும்.

நாணயங்கள்

  • முகமதுகோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண்தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்கச் செய்திருந்தார்.
  • டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள “ஜிட்டல்” என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன.
  • இல்துமிஷ் அறிமுகம் செய்த “டங்கா” எனப்படும் வெள்ளி நாணயங்கள்,
  • அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள்
  • முகமதுபின் துக்ளக்கின் செப்பு நாணயங்கள்
  • ஒரு ஜிட்டல் 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டதாகும். 48 ஜிட்டல்கள் 1 வெள்ளி டங்காவுக்குச் சமமாகும்.

சமய இலக்கியங்கள்:

  • சோழர்களின் காலம் “பக்தி இலக்கியங்களின் காலம்” என்று அழைக்கப்படுகிறது.
  • கம்பராமாயணம், சேக்கிழாரின் பெரியபுராணம், பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு நாதமுனியால் தொகுக்கப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தம், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாசகம் ஆகியவை சோழர்காலப் பக்தி இலக்கியங்களாகும்.
  • ஜெயதேவரின் கீதகோவிந்தம் (12 ஆம் நூற்றாண்டு) தென்னிந்திய பக்தி இலக்கிய மரபின் தொடர்ச்சியாகும்.
  • பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறைநிலை உணர்வு பெற்ற கவிஞரான கபீர்தாஸ் பக்தி இயக்கத்தால் கவரப்பெற்றவராவார்.

சமய சார்பற்ற இலக்கியங்கள்:

  • கங்காதேவியால் இயற்றப்பட்ட “மதுரா விஜயம்”,

  • கிருஷ்ணதேவராயரின், “அமுக்த மால்யதா”

  • சந்த்பார்தையின் “பிருதிவி ராஜ ராசோ” ராஜபுத்திர அரசர்களின் மனத்துணிச்சல்

  • இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து உள்ள ஒரே சான்று கல்ஹணரின் “ராஜதரங்கினி” (11ஆம் நூற்றாண்டு) மட்டுமே.

பயணிகளும் பயண நூல்களும்

  • [[மார்கோபோலோ]]
  • [[இபன் பதூதா]]

[[விஜய நகரம்]]

  • [[நிகோலோ கோண்டி]]
  • [[அப்துர் ரஸாக்]]
  • [[டோமிங்கோ பயஸ்]]