ஆள்வினை உடைமை

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்

பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றிவறிந் தாள்வினை இன்மை பழி

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர்