அலாவுதின்-கில்ஜி

  • கி.பி 1296-ல் ஜலாலுதின் கில்ஜியின் மகன் [[ருக்னுதீன் இப்ராஹிம்]] மை கொலை செய்து விட்டு அரியணையை கைப்பற்றினார். (oct. 3. 1296-ல் முடிசூட்டு விழா).*
  • இயற்பெயர் - அலி குருஷா
  • அலாவுதின் கில்ஜியின் வாரிசுகள்: கிசர் கான், முபாரக் ஷா, சதிகான், ஷிகாபுதின் உமர்கான்.

படைத்தளபதிகள்

  • ஜபர்கான் - மங்கோலிய படையெடுப்பை தடுத்தவர்

  • உலுக்கான் & நசரத்கான் - வட இந்திய படையெடுப்பை மேற்கொண்டவர்.

  • [[மாலிக்காபூர்]] - தென் இந்திய படையெடுப்பை மேற்கொண்டவர்.

  • துருக்கிய தலைவர் கலிபாவிடம் அனுமதிபெற்ற ஒரே டெல்லி சுல்தான்.

  • நில அளவை செய்த முதல் டெல்லி சுல்தான்

  • தென்னிந்தியா மீது படையெடுத்த முதல் டெல்லி சுல்தான் கில்ஜி

அலாவுதின் கில்ஜியின் 2 ஆசைகள்

  • பெரிய சமயத் தலைவராக வேண்டும்.
  • அலெக்சாண்டரை போல உலகத்தை வெற்றி கொள்ள வேண்டும்.

படையெடுப்புகள்

மங்கோலிய தலைவன் -குலுகுகான் (குவாஜா) தலைமையில் கி.பி 1296-1308-சுல்தாணிக்கு எதிராக படையெடுத்தனர்.

மங்கோலியர்களை டெல்லிக்கு வரவிடாமல் தடுத்த அலாவுதின் கில்ஜியின் படைத்தளபதி - ஜாபர்கான்

வட இந்திய படையெடுப்புகள்

குஜராத் படையெடுப்பு (கி.பி1299-1300)

  • குஜராத்-ஐ கைப்பற்ற உலுக்கான், நசரத்கான் என்ற இரு படைத் தளபதிகளை கில்ஜி அனுப்பினார்.
  • இதில் குஜராத் அரசர் “ராஜா கண்ணா” தோல்வி.
  • குஜராத் படையெடுப்பின் போது தான் இந்து அடிமை ”தாபூர்” (எ) “அலி” கைப்பற்றப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு “மாலிக் நாயப் என்ற பதவி வழங்கப்பட்டது. (மாலிக்காபூர்)

இரான்தம்பூர் படையெடுப்பு (1301)

  • 1301-ல் இரான்தம்பூர் அரசர் ராணா அமிர்தோவர் மீதி படையெடுத்தனர். 3 மாத கால முற்றிகைக்கு பின் அந்த அரசு வீழ்ச்சியடைந்தது.
  • ராஜபுத்திர பெண்கள் ஜவ்ஹர் முறைப்படி தீக்குளித்தி மாண்டனர்.

சித்தூர் படையெடுப்பு (1303)

  • சித்தூரின் அரசர் - ராணா ரத்தன் சிங்
  • மனைவி -ராணி பத்மினி
  • கி.பி 1303-ல் அலாவுதின் கில்ஜி படையெடுத்து சித்தூரை கைப்பற்றினார்.
  • ராணி பத்மினி (ம) அரண்மனையிலுள்ள பெண்கள் ஜவஹர் முறைப்படி உயிர் நீத்தனர்.
  • ராணி பத்மினி கதையை “பத்மாவத்” என்ற நூலில் முகமதி ஜெயசி விவரித்துள்ளார்.
  • சித்தூரின் பெயரை “கிசராபாத்” என மாற்றினார்.

தக்காண படையெடுப்பு

  • தக்காணத்தை வென்ற முதல் சுல்தான்

தென்னிந்திய படையெடுப்பின்

  • படைத்தளபதி- மாலிக்காபூர்
  • தெற்கில் ஆட்சி செய்த 4 முக்கிய அரசுகள்
  • தேவகிரி - யாதவர்கள் - ராமச்சந்திர தேவர் (கி.பி1276, 1307, 1314)
  • கி.பி 1296-ல் அலாவுதின் கில்ஜி படையெடுப்பு
  • கி.பி1307, 1314-ல் மாலிக்காபூர் படையெடுப்பு
  • ராமச்சந்திர தேவரின் மகன்-சங்கர தேவர்
  • ராமச்சந்திர தேவரின் மகள் - தேவளா தேவி
  • தேவளா தேவியை அவாவுதின் கில்ஜியின் மகன் கிசர்கான் திருமணம் செய்து கொண்டார்.
  • வாரங்கல் - காகத்தியர்கள் - பிரதாபருதீர தேவன் -1309.
  • துவார சமுத்திரம் - ஹொய்சாளர்கள்-III-ம் வீர பல்லாளா-1310
  • [[மதுரை]] - [[பாண்டியர்கள்]] - [[வீர பாண்டியர்]] -1311
  • மதுரை படையெடுப்பின் போது சிதம்பரம், திருவரங்கம் ஆகிய நகரங்களும் சூறையாடப்பட்டன.

நிர்வாக சீர்திருத்தங்கள்

  • அலாவுதின் கில்ஜி தன்னை கடவுளின் பிரதிநிதியாக கருதினார்.
  • அலாவுதின் ஆட்சிக்கு வந்தவுடன் 4 ஆணைகளை பிறப்பித்தார்.
  1. உயர்குடியினர் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரகசிய நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக சுல்தான் கவனத்திற்கு வரும்படி செய்தார்.
  2. ஒற்றர் முறையை செம்மையாக சீரமைத்தார்.
  3. மது விற்பனை மற்றும் போதை மருந்து தடை செய்யப்பட்டன.
  4. சுல்தான் அனுமதியின்றி விழாக்களும், கோரிக்கைகளும் நடத்த தடை விதிக்கப்பட்டது. இத்தகைய கடும் நடவடிக்கையால் ஏற்படும் கிளர்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

படை நிர்வாகம்

  • நிலையான பெரும்படையை வைத்திருந்தார்.
  • படைவீரர்களுக்கு ஊதியம் அரசுக் கருவூலத்திலிருந்து பணமாக செலுத்தப்பட்டது.
  • ஹீலியா என்ற படைவீரர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
  • அலாவுதின் கில்ஜியின் படையில் 4,75,000 குதிரை வீரர்கள் இருந்தனர் - பெரிஷ்டா.
  • பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்த அங்காடி சீர்திருத்தம் மேற்கொண்டார்.
  • குதிரைகளுக்கு சூடு போடும் “தாக்” (அரச விலங்குகள் என்பதற்கான அடையாளம்) என்ற முறையை கொண்டு வந்தார்.

அங்காடி சீர்திருத்தங்கள்

  • அங்காடி சீர்திருத்திற்கென தனியே “திவானி நியாசத்” என்ற துறை செயல்பட்டது.
  • இதன் பணி: தானியங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் விதத்தில் அச்சு தானிய கிடங்கில் போதிய இருப்பு உள்ளதையும், பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து அறிவிப்பையும் வெளியிடுகிறது.
  • இதி “நாயப்-இ-ரியாசத்’ என்ற அதிகாரியின் கீழ் செயல்பட்டது.
  • ஒவ்வொரு அங்காடியும் “சஹானா-இ-மண்டி” என்ற உயர் அதிகாரியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது.
  • இந்த அங்காடிகள் செயல்படும் விதம் பற்றி சுல்தானுக்கு ரகசிய அறிக்கைகள் அனுப்ப “முன் ஹியான்கள்” என்ற ரகசிய முகவர்கள் இருந்தனர்.

4 வகையான அங்காடிகள்

  • தானியங்கள்

  • துணி மணி, சர்க்கரை, உலர்ந்த பழங்கள், எண்ணெய்

  • குதிரைகள், அடிமைகள், ஆடுமாடுகள்

  • பலவிதமான பொருட்கள்

  • நில அளவைக்கு ஏற்பாடு செய்த முதல் டெல்லி சுல்தான்.

  • நிலவரி பெரும்பாலும் பணமாக நேரடியாகவே வசூலிக்கப்பட்டதால் கிராமத் தலைவர்கள் மரபாக அனுபவித்து வந்த வரி வசூலிக்கும் உரிமை பறிபோனது.

  • பெரும் நிலச்சுவான்தாரர்களும் நிலவரியிலிருந்து தப்பிக்க முடியவில்லை.

  • ஏழைகள் மீது அதிக வரிச்சுமை இல்லை.

  • ஊழல் செய்த அரசு அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

  • அஞ்சல் துறையை ஏற்பாடு செய்தார்.

  • ஷெர்ஷா, அக்பர் மேற்கொண்ட நிலச்சீர்திருத்தத்திற்கு முன்னோடியாக நிகழ்ந்தார்.

நில வகைகள்

  1. சாகுபடி நிலம் -கல்சா
  2. நன்கொடை நிலம் - துனம்
  3. மதத்திற்கும், மடத்திற்கும் வங்கப்பட்ட நிலமீ - வஃபு

விதிக்கப்பட்ட வரிகள்

  • சரை - பசு (ம) பால் தரும் இனம் (மேய்ச்சல் வரி)
  • கராஜ் - விளைச்சல் வரி ⅓ பங்கு
  • ஜெசியா - முஸ்லீம் அல்லாதோர் மீதான வரி.
  • ஜகாத் - முஸ்லீம்களுக்கு விதிக்கப்படும் சொத்து வரி 1/40
  • கும்ஸ் - போர் வரி
  • திவானி -இ-மஸ்டகராஸ் வரி வசூல் (அ) வருவாய் திறை
  • நாயப் ஷெரிப் - வரி வசூல் செய்யும் அதிகாரி.
  • விவசாயம் (ம) வர்த்தகத்தை நவீனமயமாக்கி சந்தை பொருளாதாரத்தை உருவாக்கினார்.

ஆதரித்த அறிஞர்கள்

  • [[அமீர்குஸ்ரு]] - பாரசீக் கவிஞம்)
  • இயற்பெயர் - அபுல் ஹாசன் யாமினி குஸ்ரு
  • அலாவுதின் கில்ஜி பற்றிய நூல்.- தாரிக்-இ-அலாய்.
  • இதில் அங்காடி சீர்திருத்தம் (ம) நிர்வாகம் பற்றி விளக்கியுள்ளார்.
  • பாரசீக மொழி கவிதை `கழல்’ என்ற புதிய இசை தொடங்க வழி செய்தது
  • இவர் கவாலி என்ற இசை பாணியில் சித்தார், காயில் போன்ற இசை கருவிகளை கண்டறிந்தார்.

கட்டிடக்கலை

  • [[குதுப்மினார்]] போல ஒரு பெரிய மினாரை கட்ட வேண்டுமென சபதம். ஆனால் ஒரே மாடியில் அரை குறையாக விட்டு விட்டார்.
  • சீரி நகரம் (டெல்லி அருகில்) - புதிய தலைநகரம்,
  • ஹரத் நிஜாப்தின் அலுயாவின் தர்கா
  • ஆயிரம் தூண்கள் அரண்மனை.
  • அலைதர் வாசா - புகழ் வாய்ந்த நுழைவாயில் (செல்சக் துருக்கியர் கலைபாணியில் கட்டப்பட்டவை)

அலாவுதின் கில்ஜியின் முடிவு

  • Jan 2, 1316-ல் இறப்பு. இறப்பிற்கு முன் தன் மகன் கிசர்கானை வாரிசாக அறிவித்தார். ஆனால் இவர் அரியணை ஏறவில்லை.

  • [[மாலிக்காபூர்]] (கி.பி 1316) → 35 நாட்கள் மட்டுமே ஆட்சி

  • மாலிக்காபூர் சூழ்ச்சியால் அலாவுதின் கில்ஜியின் மனைவி, மகன் கிச்ர்கான் சிறைபிடிக்கப்பட்டனர்.

  • அலாவுதினின் கடைசி மகன் ஷிகாபுதீன் உமர்கான் என்பவரை பெயரளவில் அரியணை அமர்த்தி மாலிக்காபூர் (7 வயது) ஆட்சி செய்தார்.

  • பின்னர் அலாவுதீன் மகன்களான கிசர்கான், சதிகான் ஆகியோரின் கண்களை பறிக்க ஆணையிட்டார்.

  • மற்றொரு மகன் முபாரக்க்ஷா-வின் தலையை சீவ சொல்லி ஆணையிட்டார்.

  • இப்போது முபாரக் ஷா விரித்த சூழ்ச்சி வலையில் வீழ்ந்த படைவீரர்கள்

  • காபூருக்கு எதிராக மாறி அவரை கொலை செய்தனர்.

  • முபாரக்ஷா (கி.பி1316-1320)

இவர் முதலில் ஷிகாபுதின் உமர்காணுக்கே ஆட்சியை விட்டு கொடுத்து 2 மாதம் கழித்தி ஆட்சியை கைப்பற்றினார். முபாரக் ஷா-வின் படைத்தளபதி- மல்லி இஸ்டு (இந்து) பின் இஸ்லாமியராக மாறி தன் பெயரை குலஃருகான் என மாற்றி கொண்டார்.

படையெடுப்புகள்:-

  • முபாரக்ஷா குஜராத் அரசர் “ஹரபாலருக்கு எதிராக 2-இல் முல்க்” என்பவர் தலைமையில் படையை அநுப்பி ற்ெறி பெற்றனர்.
  • குஸ்ரு கான் - தெலுங்கானாவிற்கு எதிராக படையெடுப்பு.
  • முபாரக்ஷாவின் ஆசிரியம் - காவி ஜியாவுத்தீன் x இஜீதியில் முபாரகீஷா-வை குஸ்ருகானே கொலை செய்தி ஆட்சியை கைப்பற்றினார்.

குஸ்ருகான் (கி.பி 1320)

  • இசுலாமிய வழியாட்டு தலங்களை இடித்தவர். அலாவுதின் காலத்தில் பசூசாப்-ன் (திபல்பூர்)ஆளுநராக இருந்த கியாசுதின் துகளக் பெரும் படையுடன் வந்தி அரியணையை கைப்பற்றினார்.