அறம்

குற்றங்களை அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் ஊன் பொதிப் பசுங்குடையார்.

கொடை

வள்ளல்கள்”இல்லோர் ஒக்கல் தலைவன்”, “பசிப்பிணி மருத்துவன் என்றெல்லாம் போற்றப்பட்டனர்.

வழங்குவதற்குப் பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுக்கும் பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தனை நக்கீரர் பாராட்டுகிறார்.

வள்ளலின் பொருள் இரவலனின் பொருள்; வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று பெரும்பதுமனார் குறிப்பிடுகிறார்.

உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஒளவையார்.

இரவலர் வராவிட்டாலும் தேடி வரவழைத்தல் ==ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின்== இயல்பு

==நச்செள்ளையார்==.

==பேகன்== ==மறுமை நோக்கிக் கொடுக்காதவன்== ==பரணர்==

தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக் குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாராட்டுகிறார்.

புற இலக்கியங்களில் மட்டுமன்றி அக இலக்கியங்களிலும் ஈதல் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

உதவி

உதவி செய்தலை ஈழத்துப் பூதன் தேவனார் ‘உதவியாண்மை’ என்று குறிப்பிடுகிறார்.

‘உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான்’ என்கிறார் நல்வேட்டனார்.

இதனால்தான் ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவு’ என்கிறது தமிழ் இலக்கியம்.

நிறைவடைகிறவனே செல்வன் என்கிறது சீன நாட்டுத் தாவோயியம்.

கி.பி.(பொ.ஆ.) ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர்பூண்டு சீனாவுக்குச் சென்றார்.

பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார். அதிலிருந்து உருவானதே “ஜென்” தத்துவம்.

இது, பின்னர் ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது.

போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.