அருஞ்சொற்பொருள்

  1. நில வகைகள் - தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம்போக்கு, சுவல், அவல்.

  2. சொல்லுதல் - ,விளம்புதல், செப்புதல், இயம்பல், மொழிதல்

  3. துய்ப்பது - கற்பது, தருதல்

  4. மேவலால் - பொருந்துதலால், பெறுதலால்

  5. மயலுறுத்து - மயங்கச்செய்

  6. ப்ராண ரஸம் - உயிர்வளி

  7. லயத்துடன் - சீராக

  8. நனந்தலை உலகம் - அகன்ற உலகம்

  9. நேமி - சக்கரம்

  10. கோடு - மலை

  11. கொடுஞ்செலவு - விரைவாகச் செல்லுதல்

  12. நறுவீ - நறுமணமுடைய மலர்கள்

  13. தூஉய் - தூவி

  14. விரிச்சி - நற்சொல்

  15. தயங்கி – அசைந்து

  16. காய்ந்தேன் – வருந்தினேன்

  17. புழை – துளை

  18. சுவல் - தோள்

  19. பாக்கம் - பேரூர்

  20. விசும்பு – வானம்

  21. ஊழி – யுகம்

  22. ஊழ் – முறை

  23. தண்பெயல் – குளிர்ந்த மழை

  24. ஆர்தருபு – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த

  25. பீடு – சிறப்பு

  26. ஈண்டி – செறிந்து திரண்டு

  27. அருகுற – அருகில்

  28. முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்.

  29. சுடினும் - சுட்டாலும்

  30. மாளாத-தீராத

  31. மாயம் - விளையாட்டு

  32. கேள்வியினான் - நூல் வல்லான்

  33. கேண்மையினான் - நட்பினான்

  34. தார் - மாலை

  35. முடி - தலை

  36. முனிவு - சினம்

  37. அகத்து உவகை - மனமகிழ்ச்சி

  38. தமர் - உறவினர்

  39. நீபவனம் - கடம்பவனம்

  40. கவரி - சாமரை (கவரிமானின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சினம்)

  41. நுவன்ற-சொல்லிய

  42. என்னா - அசைச்சொல்

  43. சுண்ணம் - நறுமணப்பொடி

  44. தூசு - பட்டு

  45. துகிர் - பவளம்

  46. கிழி - துணி

  47. வெறுக்கை - செல்வம்

  48. நொடை - விலை

  49. காருகர் - நெய்பவர் (சாலியர்)

  50. பாசவர் - வெற்றிலை விற்போர்

  51. ஓசுநர் - எண்ணெய் விற்போர்

  52. மண்ணுள் வினைஞர் - ஓவியர்

  53. மண்ணீட்டாளர் - சிற்பி

  54. அசைஇ – இளைப்பாறி

  55. அல்கி – தங்கி

  56. கடும்பு - சுற்றம்

  57. நரலும் – ஒலிக்கும்

  58. ஆரி - அருமை

  59. படுகர் – பள்ளம்

  60. வயிரியம் – கூத்தர்

  61. வேவை – வெந்தது

  62. இறடி – தினை

  63. பொம்மல் – சோறு

  64. பண்டி - வயிறு

  65. அசும்பிய - ஒளிவீசுகிற

  66. முச்சி - தலையுச்சிக் கொண்டை

  67. சேக்கை – படுக்கை

  68. யாக்கை – உடல்

  69. பிணித்து – கட்டி

  70. வாய்ந்த – பயனுள்ள

  71. இளங்கூழ் – இளம்பயிர்

  72. தேம்ப – வாட

  73. அசும்பு – நிலம்

  74. உய்முறை – வாழும் வழி

  75. ஓர்ந்து – நினைத்து

  76. கடிந்து - விலக்கி

  77. உவமணி – மணமலர்

  78. படலை – மாலை

  79. துணர் – மலர்கள்

  80. கிழக்கு - குனக்கு

  81. மேற்கு - குடக்கு

  82. வடக்கு - வாடை

  83. கிழக்கு - கொண்டல்

  84. மேற்கு - கோடை

  85. வாடை - வாடைக்காற்று

  86. தெற்கு - தென்றல்

  87. திறமெல்லாம் - சிறப்பெல்லாம்;

  88. சிந்து - ஒருவகை இசைப்பாடல்.

  89. ஊனரசம் - குறையுடைய சுவை;

  90. வனப்பு - அழகு. அவை அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு.

  91. கந்தம் - மணம்

  92. மிசை – மேல்

  93. மா - வண்டு

  94. வாவி–பொய்கை

  95. வளர் முதல் - நெற்பயிர்

  96. தரளம் - முத்து

  97. பணிலம் - சங்கு

  98. வரம்பு - வரப்பு

  99. கழை - கரும்பு

  100. கா - சோலை, காடு

  101. குழை – சிறு கிளை

  102. அரும்பு – மலர், மொட்டு

  103. மாடு - பக்கம்

  104. நெருங்கு வளை - நெருங்குகின்ற சங்குகள்

  105. கோடு - குளக்கரை

  106. துதைந்து எழும் - கலக்கி எழும்

  107. கன்னி வாளை - இளமையான வாளைமீன்

  108. சூடு - நெல் அரிக்கட்டு

  109. சுரிவளை - சங்கு

  110. வேரி - தேன்

  111. பகடு - எருமைக்கடா

  112. மேதி - எருமை

  113. பாண்டில் - வட்டம்

  114. சிமயம் - மலையுச்சி

  115. நாளிகேரம் - தென்னை

  116. நரந்தம் - நாரத்தை

  117. கோளி - அரசமரம்

  118. சாலம் - ஆச்சா மரம்

  119. தமாலம் - பச்சிலை மரம்

  120. இரும்போந்து - பருத்த பனைமரம்

  121. சந்து - சந்தன மரம்

  122. நாகம் - நாகமரம்

  123. காஞ்சி – ஆற்றுப்பூவரசு.

  124. புணரியோர் – தந்தவர்

  125. புன்புலம் – புல்லிய நிலம்

  126. தாட்கு – முயற்சி, ஆளுமை

  127. தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – குறைவில்லாது நீர்நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்.

  128. சமயக் கணக்கர் -சமயத் தத்துவவாதிகள்

  129. பாடைமாக்கள் - பல மொழிபேசும் மக்கள்

  130. குழீஇ-ஒன்றுகூடி

  131. தோம் - குற்றம்

  132. கோட்டி - மன்றம்

  133. பொலம்-பொன்

  134. வேதிகை-திண்ணை

  135. தூணம்-தூண்

  136. தாமம்-மாலை

  137. கதலிகைக் கொடி -சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது

  138. காழூன்று கொடி - கொம்புகளில் கட்டும் கொடி

  139. விலோதம் - துணியாலான கொடி

  140. வசி- மழை

  141. செற்றம்-சினம்

  142. கலாம்-போர்

  143. துருத்தி- ஆற்றிடைக்குறை(ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு).

  144. நவிலல் – சொல்லல்.

  145. மாக்கடல் – பெரிய கடல்,

  146. மின்னாளை – மின்னலைப் போன்றவளை;

  147. மின்னாள் – ஒளிரமாட்டாள்.

  148. தணல் – நெருப்பு;

  149. தாழி - சமைக்கும் கலன்;

  150. அணித்து – அருகில்.

  151. தவிர்க்கஒணா – தவிர்க்க இயலாத;

  152. யாண்டும் – எப்பொழுதும்.

  153. மூவாது - முதுமை அடையாமல்;

  154. நாறுவ- முளைப்ப,

  155. தாவா - கெடாதிருத்தல்

  156. கோர்வை/கோவை : கோ என்பது
    வேர்ச்சொல். கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி. (எ.கா.) ஆசாரக்கோவை, ஊசியில் நூலைக் கோத்தான்

  157. மைவனம் – மலைநெல்;

  158. முருகியம்- குறிஞ்சிப்பறை;

  159. பூஞ்சினை-பூக்களை உடைய கிளை;

  160. சிறை- இறகு;

  161. சாந்தம் - சந்தனம்

  162. பூவை- நாகணவாய்ப் பறவை;

  163. பொலம்- அழகு;

  164. கடறு- காடு;

  165. முக்குழல்-கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்;

  166. பொலி- தானியக்குவியல்;

  167. உழை- ஒரு வகை மான்.

  168. வாய்வெரீஇ- சோர்வால் வாய் குழறுதல்;

  169. குருளை- குட்டி;

  170. இனைந்து- துன்புறுதல்;

  171. உயங்குதல்- வருந்துதல்.

  172. படிக்குஉற- நிலத்தில் விழ;

  173. கோடு- கொம்பு

  174. கல்-மலை;

  175. முருகு- தேன்,

  176. மணம் - அழகு;

  177. மல்லல்- வளம்;

  178. கரிக்குருத்து- யானைத்தந்தம்;

  179. புரைதப- குற்றமின்றி.

  180. துவரை-பவளம்;

  181. மரை- தாமரை மலர்;

  182. விசும்பு- வானம்;

  183. மதியம்-நிலவு.

  184. தீபம் – விளக்கு;

  185. சதிர் – நடனம்;

  186. தாமம் - மாலை

  187. தெங்கு – தேங்காய்

  188. இசை – புகழ்

  189. வருக்கை – பலாப்பழம்

  190. நெற்றி - உச்சி

  191. மால்வரை – பெரியமலை

  192. மடுத்து – பாய்ந்து;

  193. கொழுநிதி - திரண்ட நிதி

  194. மருப்பு – கொம்பு

  195. வெறி – மணம்

  196. கழனி – வயல்

  197. செறி – சிறந்த

  198. இரிய - ஓட

  199. சூல் – கரு

  200. அடிசில் - சோறு

  201. மடிவு – சோம்பல்

  202. கொடியனார் - மகளிர்

  203. நற்றவம் – பெருந்தவம்

  204. வட்டம் - எல்லை

  205. வெற்றம் - வெற்றி

  206. அள்ளல் – சேறு;

  207. பழனம் – நீர் மிக்க வயல்;

  208. வெரீஇ – அஞ்சி;

  209. பார்ப்பு – குஞ்சு.

  210. நாவலோ - நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து;

  211. இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல்.

  212. நந்து – சங்கு;

  213. கமுகு – பாக்கு.

  214. முத்தம் - முத்து

  215. புரிசை - மதில்;

  216. அணங்கு - தெய்வம்;

  217. சில்காற்று - தென்றல்;

  218. புழை - சாளரம்;

  219. மாகால் - பெருங்காற்று;

  220. முந்நீர் - கடல்;

  221. பணை - முரசு;

  222. கயம் - நீர்நிலை;

  223. ஓவு - ஓவியம்;

  224. நியமம் - அங்காடி.

  225. விண் – வானம்;

  226. ரவி – கதிரவன்

  227. நசை-விருப்பம்;

  228. நல்கல் -வழங்குதல்;

  229. பிடி-பெண்யானை;

  230. வேழம் –ஆண்யானை;

  231. யா-ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது;

  232. பொளிக்கும் –உரிக்கும்;

  233. ஆறு-வழி

  234. வண்மொழி – வளமிக்கமொழி

  235. வைப்பு – நிலப்பகுதி

  236. இசை – புகழ்

  237. சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்

  238. தொல்லை – பழமை, துன்பம்

  239. மரபு – வழக்கம்

  240. மயக்கம் - கலவை

  241. திரிதல் – மாறுபடுதல்

  242. இருதிணை – உயர்திணை, அஃறிணை

  243. வழாஅமை – தவறாமை

  244. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)

  245. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

  246. தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்

  247. முழவு – இசைக்கருவி

  248. செஞ்சொல் – திருந்திய சொல்

  249. வள்ளைப்பாட்டு - நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்

  250. வின்னம் - சேதம்

  251. கெடிகலங்கி - மிக வருந்தி

  252. வாகு - சரியாக

  253. சம்பிரமுடன் - முறையாக

  254. சேகரம் - கூட்டம்

  255. மெத்த - மிகவும்

  256. காங்கேய நாடு - கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று

  257. தீர்வன - நீங்குபவை

  258. திறத்தன - தன்மையுடையன

  259. உவசமம் - அடங்கி இருத்தல்

  260. கூற்றவா - பிரிவுகளாக

  261. நிழல்இகழும் - ஒளிபொருந்திய

  262. பூணாய் - அணிகலன்களை அணிந்தவளே

  263. பேர்தற்கு - அகற்றுவதற்கு

  264. பிணி - துன்பம்

  265. திரியோகமருந்து - மூன்று யோகமருந்து

  266. ஓர்தல் - நல்லறிவு

  267. தெளிவு - நற்காட்சி

  268. பிறவார் - பிறக்கமாட்டார்

  269. நித்தம் நித்தம் - நாள்தோறும்

  270. மட்டு - அளவு

  271. பேணுவையேல் - பாதுகாத்தால்

  272. சுண்ட - நன்கு

  273. திட்டுமுட்டு - தடுமாற்றம்

  274. கலன் – அணிகலன்

  275. முற்ற – ஒளிர

  276. தடம் - அடையாளம்

  277. அகம்பாவம் - செருக்கு

  278. அலந்தவர் - வறியவர்

  279. கிளை – உறவினர்

  280. செறாஅமை - வெறுக்காமை

  281. பேதையார் – அறிவற்றவர்

  282. நோன்றல் – பொறுத்தல்

  283. மறா அமை - மறவாமை

  284. போற்றார் – பகைவர்

  285. பொறை - பொறுமை

  286. வாரி - வருவாய்

  287. எஞ்சாமை - குறைவின்றி

  288. முட்டாது - தட்டுப்பாடின்றி

  289. ஒட்டாது – வாட்டம்இன்றி

  290. வைகுக - தங்குக

  291. ஓதை - ஓசை

  292. வெரீஇ - அஞ்சி

  293. யாணர் - புதுவருவாய்

  294. மறலி - காலன்

  295. வழிவர் - நழுவி ஓடுவர்

  296. கரி - யானை

  297. பிலம் - மலைக்குகை

  298. தூறு - புதர்

  299. மண்டுதல் - நெருங்குதல்

  300. அருவர் - தமிழர்

  301. இறைஞ்சினர் - வணங்கினர்

  302. உடன்றன - சினந்து எழுந்தன

  303. முழை - மலைக்குகை

  304. சீவன் – உயிர்

  305. வையம் – உலகம்

  306. சத்தியம் - உண்மை

  307. சபதம் – சூளுரை

  308. ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி

  309. மோகித்து – விரும்பி

  310. நமன் – எமன்

  311. நாணாமே – கூசாமல்

  312. சித்தம் – உள்ளம்

  313. உய்ம்மின் – ஈடேறுங்கள்

  314. நம்பர் – அடியார்

  315. ஈயில் - வழங்கினால்

  316. படமாடக்கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்

  317. பகராய் - தருவாய்

  318. பராபரம் – மேலான பொருள்

  319. ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு

  320. அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு

  321. நிறை - மேன்மை

  322. அழுக்காறு - பொறாமை

  323. பொறை - பொறுமை

  324. மதம் - கொள்கை

  325. பொச்சாப்பு - சோர்வு

  326. இகல் - பகை

  327. மையல் - விருப்பம்

  328. மன்னும் - நிலைபெற்ற

  329. ஓர்ப்பு - ஆராய்ந்து தெளிதல்

  330. திங்கள் - நிலவு

  331. கொங்கு - மகரந்தம்

  332. அலர் - மலர்தல்

  333. திகிரி - ஆணைச்சக்கரம்

  334. பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில்

  335. மேரு - இமயமலை

  336. நாமநீர் - அச்சம் தரும் கடல்

  337. அளி - கருணை

  338. நிருமித்த - உருவாக்கிய

  339. விளைவு - விளைச்சல்

  340. சமூகம் - மக்கள் குழு

  341. அசதி - சோர்வு

  342. ஆழி பெருக்கு - கடல் கோள்

  343. மேதினி - உலகம்

  344. ஊழி - நீண்டதொரு காலப் பகுதி

  345. உள்ளப்பூட்டு - அறியவிரும்பாமை

  346. ஔடதம் - மருந்து

  347. மாசற - குறை இல்லாமல்

  348. சீர்தூக்கின் ஒப்பிட்டு ஆராய்ந்து

  349. மாற்றார் - மற்றவர்

  350. நெறி - வழி

  351. வற்றாமல் - அழியாமல்

  352. ஒப்புரவு - உதவி செய்தல்

  353. நட்டல் - நட்புக் கொள்ளுதல்

  354. இழைத்து-பதித்து

  355. முத்தேன் கொசுத்தேன் கொம்புத்தேன், பொந்துத்தேன்,

  356. மல்லெடுத்த - வலிமை பெற்ற

  357. சமர் - போர்

  358. நல்கும் - தரும்

  359. கழனி - வயல்

  360. மறம் - வீரம்

  361. எக்களிப்பு - பெருமகிழ்ச்சி

  362. கலம் - கப்பல்

  363. ஆழி - கடல்

  364. கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி

  365. மின்னல் வரி - மின்னல் கோடுகள்

  366. அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துக்கள்

  367. தண்டருள் - குளிர்ந்த கருணை

  368. கூர் - மிகுதி

  369. செம்மையருக்கு சான்றோருக்கு

  370. ஏவல் - தொண்டு

  371. பராபரமே - மேலான பொருளே

  372. பணி - தொண்டு

  373. எய்தும் - கிடைக்கும்

  374. சுயம் - தனித்தன்மை

  375. நீள்நிலம் - பரந்த உலகம்

  376. முற்றும் - முழுவதும்

  377. மாரி - மழை

  378. கும்பி - வயிறு

  379. ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும்

  380. குறி- குறிக்கோள்

  381. விரதம் - நோன்பு

  382. பொழிகிற தருகின்ற

  383. நெறி - வழி

  384. ஒப்புமை - இணை

  385. அற்புதம் - விந்தை

  386. உபகாரி - வள்ளல்

  387. ஈன்று பெற்று

  388. நச்சரவம்-விடமுள்ள பாம்பு

  389. பரவசம் - மகிழ்ச்சிப்பெருக்கு

  390. துஷ்டிகேட்டல் - துக்கம் விசாரித்தல்

  391. சிற்றில் - சிறு வீடு

  392. யாண்டு - எங்கே

  393. கல் அளை - கற்குகை

  394. ஈன்ற வயிறு பெற்றெடுத்த வயிறு

  395. சூரன் - வீரன்

  396. சாஸ்தி - மிகுதி

  397. விஸ்தாரம் - பெரும்பரப்பு

  398. வாரணம் -யானை

  399. சிங்காரம் அழகு

  400. கமுகு - பாக்கு

  401. ஞெகிழி - தீச்சுடர்

  402. அழுவம் - கடல்

  403. சென்னி -உச்சி

  404. உரவுநீர் பெருநீர்ப் பரப்பு

  405. கரையும் - அழைக்கும்

  406. வேயாமாடம் - வைக்கோலால் வேயப்படுவது

  407. அழுவம் - கடல்

  408. தூண் - மதலை

  409. உரு-அழகு

  410. போழ -பிளக்க

  411. வங்கூழ் - காற்று

  412. நீகான் - நாவாய் ஓட்டுபவன்

  413. வங்கம் - கப்பல்

  414. எல் -பகல்

  415. அல் - இரவு

  416. கோடு உயர் - கரை உயர்ந்த

  417. மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்

  418. எத்தனிக்கும் - முயலும்

  419. வெற்பு -மலை

  420. அன்னதோர்-அப்படி ஒரு

  421. வைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம்

  422. கோட்படா - ஒருவரால் கொள்ளப்படாது

  423. வாய்த்து ஈயில் - வாய்க்கும்படி கொடுத்தலும்

  424. விச்சை - கல்வி

  425. பிரும்மாக்கள் - படைப்பாளர்கள்

  426. வனப்பு - அழகு

  427. நெடி-நாற்றம்

  428. பூரிப்பு - மகிழ்ச்சி

  429. வண்கீரை- வளமான கீரை

  430. முட்டப்போய் - முழுதாகச் சென்று

  431. கால் -வாய்க்கால், குதிரையின் கால்

  432. மறித்தல் தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திக் கட்டுதல்), தடுத்துத் தாக்குதல் எதிரிகளைத்

  433. மடமகள்-இளமகள்

  434. வறந்திருந்த - வறண்டிருந்த

  435. புகவா -உணவாக

  436. முன்றில் - வீட்டின் முன் இடம் (திண்னை) இங்கு வீட்டைக் குறிக்கிறது.

  437. குழி - நில அளவைப் பெயர்

  438. சாண் - நீட்டல் அளவைப் பெயர்

  439. மணி - முற்றிய நெல்

  440. சும்மாடு பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்

  441. சீலை -புடவை

  442. மடை-வயலுக்கு வரும் நீர்வழி

  443. கழலுதல் - உதிர்தல்

  444. வெய்ய - வெப்பக் கதிர்வீசும்

  445. சுடர் அழியான் - ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்

  446. இடர்ஆழி - துன்பக்கடல்

  447. சொல் மாலை பாமாலை

  448. ஈன - பெற

  449. நிலன் -நிலம்

  450. களை - வேண்டாத செடி

  451. பைங்கூழ் - பசுமையான பயிர்

  452. வன்சொல்-கடுஞ்சொல்

  453. தாரணி - உலகம்

  454. தத்துவம் - உண்மை

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்:

கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்

ஐம்பெருங்குழு

எண்பேராயம்