பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.
1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்குக் குடிபெயர்ந்தது.
எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார்.
1907 ஆம் ஆண்டு தமது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பைப் பல்கலைக் கழகத்தில் படித்து 1912 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார்.
சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் உயர்அலுவலராகவும் பணியாற்றினார்.
[[பாபா சாஹேப்]] என பிரபலமாக அழைக்கப்படுகிறார்.
இந்திய சட்ட நிபுணராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார்.
1915-ல் எம். ஏ. பட்டத்தைப் பெற்றார்.
1927- கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி. எச். டி. பட்டத்தைப் பெற்றார்.
அதற்கு முன்னர் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் D.Sc. பட்டத்தையும் பெற்றிருந்தார்.
அரசியல் நிர்ணய சபையின் வரைவு குழுவின் தலைவராக இருந்தார்.
இந்திய அரசியலமைப்பின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றினார்.
இவரது மறைவுக்குப் பின்னர், 1990 ஆம் ஆண்டு [[பாரத ரத்னா]] விருது வழங்கப்பட்டது.