-
13 அடிச்சிற்றெல்லை 31 அடி பேரரெல்லை.
-
145 புலவர்கள் பாடிய 400 பாடல்கள்
-
ஆசிரியப்பா
-
தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர்
-
தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி.
-
கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
-
சங்ககால இலக்கியங்களில் அதிகமாகப்பாடப்பட்ட பாடல் பாலைத்திணையை சார்ந்ததாகும்
-
116 பாடல்களில் ஏறத்தாழ 87 அரசர்கள் மற்றும் படைத் தலைவர்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
-
ஒரே பாடலில் (44) ஒன்பது அரசர்கள் இடம்பெற்றுள்ளனர்
-
குடவோலைத் தேர்தல் முறை பற்றி கூறும் நூல்
-
வடநாட்டு செய்திகள், நந்தர்கள் மற்றும் மௌரியர்களின் படையெடுப்பைப் பற்றி
கூறும் நூல். -
பண்டைய தமிழரின் திருமண முறைகளை (86, 136) பாடல்கள் விளக்குகிறது.
-
கரிகாலனின் தந்தை இளஞ்சேட்சென்னி
-
புலவர்கள் இறைவனிடம் வேண்டிப்பெற்றது சங்கப்பலகையை.
-
சங்கபுலவர்களின் எண்ணிக்கை இறைவனை சேர்த்து 49 பேர்
நூல்
- நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு, அகப்பாட்டு
- மூன்று பிரிவுகள்
- களிற்றியானை நிரை - 120 பாடல்கள்
- மணிமிடை பவளம் - 180 பாடல்கள்
- நித்திலக்கோவை - 100 பாடல்கள்
- பாடல்களின் வரிசை
- 1, 3, 5, 7 - பாலைத் திணை
- 2, 8, 12, 18 - குறிஞ்சித் திணை
- 4, 14, 24 - முல்லைத் திணை
- 6, 16, 26 - மருதத் திணை
- 10, 20, 30 - நெய்தல் திணை
மேற்கோள்:
==ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன==
ஔவையார்
==பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை புல்லார் புரவி வல்விரைந்து பூட்டி
நெடுந்தேர் ஊர்மதி வலவ
முடிந்தன்று அம்மநாம் முன்னிய வினையே
மதுரை மள்ளனார்
வெள்ளிவீதியார் என்ற சங்ககால பெண்புலவர் கரிகாலன் மகள் ஆதிமந்தி தன் கணவனைத் தேடி அலைந்தது போல இவரும் தன் கணவனை தேடி அலைந்தாள் என இப்பாடல் உணர்த்துகிறது.
==பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி==
நாமக்கல் | கொல்லிமலை | அகம் 208 : 22
==கறங்கு இசை விழவின் உறந்தை…..==
திருச்சி | உறையூர் | அகநானூறு, 4 :14
கடும் பகட்டு யானை நெடுந்தேர் கோதை திருமா வியநகர்க் கருவூர் முன்துறை
கருவூர்
நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர். உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை,
நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும் – (அக. 390)
==“உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி விரைவுசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான் மாட ஒள்ளரி மருங்குஅறிந்து ஒய்ய”==
மருதன் இளநாகனார். - அகநானூறு
கலித்தொகையின் மருதத்தினையில் உள்ள 35 பாடல்களையும் பாடியவர் இவரே.
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது - கடல் அலை
“உலகு கிளிர்ந்தன்ன உருகெழு வங்கம்” என்று பெரிய கப்பலை அகநானூறு குறிப்பிடுகிறது.
- “பொன்னொடு வந்து கறியொடு பெயரும்…” என்று கூறும் நூல் - அகநானூறு.