வைக்கம் முகம்மது பஷீர் கேரளத்தின்டே சூஃபி அவருக்கு ஆயிரம் வேலைகள் தெரியுமாம் அவர் பார்த்த முதல் வேலை குரங்குக்குப் பேன் பார்ப்பது சாதாரணக் குரங்கு இல்லை பைத்தியம் பிடித்த பெரும் மசைக் குரங்கு இன்னொரு வேலை சுமை கழுதைகளை மலையேற்றுவது பஷீர் கழுதை ஒன்றை இழுத்துக்கொண்டு போகும் சித்திரம் சிலுவை சுமக்கும் தேவகுமாரனுக்கு நிகரானது வேறொரு வேலை குட்டிச்சாத்தான்களைக் கட்டிவைப்பது பஷீர் ஒரு குட்டிச்சாத்தனை கட்டிவிட்டு இன்னொன்றை துரத்திக்கொண்டு ஓடும் போது முதல் சாத்தான் தப்பித்துக்கொள்ளும் நான்காவது வேலை கொஞ்சம் கவித்துவமானது பேய்களைச் சிங்காரித்து மேடைக்குக் கூட்டி வருவது இப்படியாக பஷீர் தன் ஆயிரமாவது வேலையில் மூச்சிரைத்துக்கொண்டிருந்த போது அல்லா அவர் முன் தோன்றினார் மோனே பஷீர்! என்னை தெரியலையா? பஷீர் ஸ்டைலாய் பீடி வழித்துக்கொண்டே சொன்னார் தெரியாம என்ன அச்சனே! நான் கண்ட குரங்கும், கழுதையும் குட்டிச்சாத்தானும் பேயும் நீ தன்னே…
இளங்கோ கிருஷ்ணன்`